ஆண்களுக்கான சிவாங்கா சாதனா

சாதனா தீட்சை மற்றும் நிறைவு செய்யும் செயல்முறை இப்போது ஆன்லைனில் வழங்கப்படுகிறது.
For any queries, please contact us
at info@shivanga.org
சாதனாவைப் பற்றி
சிவாங்கா சாதனா என்பது, படைத்தலின் மூலமும் உச்சபட்ச சாத்தியமுமான சிவனின் ஒரு அங்கம் நீங்கள் என்பதை உங்களின் விழிப்புணர்வுக்கு கொண்டு வருவதைப் பற்றியதாகும். - சத்குரு
seperator
 
சாதனாவைப் பற்றி
 
ஆண்களுக்கான இந்த சிவாங்கா சாதனா சத்குருவால் வழங்கப்பட்டுள்ள ஒரு சக்திவாய்ந்த 42 நாட்கள் விரதமாகும். இந்த சாதனா தியானலிங்கத்தின் சக்தியதிர்வுகளை ஒருவர் கிரகிக்கும் திறனைக் உயர்த்துவதோடு, உடல், மனம் மற்றும் சக்திநிலைகளில் ஆழமான அனுபவங்களை பெறுவதற்கு வழிவகுக்கிறது.

 

ஒருவருக்குள் பக்தி எனும் தீயை பற்றச்செய்வதற்கான ஓர் அரிய வாய்ப்பாக சிவாங்கா சாதனா அமைகிறது. சிவாங்கா என்பதன் அர்த்தம் "சிவனின் அங்கம்," என்பதாகும். இந்த சிவாங்கா சாதனா படைத்தலின் மூலத்துடன் நமக்கிருக்கும் தொடர்பை நம் விழிப்புணர்வுக்கு கொண்டு வரும் வாய்ப்பையும் வழங்குகிறது. மேலும், இந்த சாதனா சக்திவாய்ந்த "ஷிவ நமஸ்காரம்," பயிற்சிக்கான தீட்சைபெறும் வாய்ப்பையும் புனிதமிக்க வெள்ளியங்கிரியின் ஏழாவது மலைக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது.
சிவனின் அங்கமாகுங்கள்
 
சிவனின் அங்கமாகுங்கள்
 
 • சக்திவாய்ந்த 42 நாட்கள் விரதம்
 • "ஷிவ நமஸ்காரம்" எனும் யோகப் பயிற்சி
 • தென்கைலாயமாம் வெள்ளியங்கிரி மலைக்குப் புனித யாத்திரை
 • உள்நிலை மலர்ச்சிக்கு அடித்தளமாகும் வகையில் உடல்நிலையிலும், மனநிலையிலும் உறுதியை வழங்குகிறது.
  வெள்ளியங்கிரியை பற்றி
   
  வெள்ளியங்கிரியை பற்றி
   
  ஆதியோகியாம் சிவன் சில காலங்கள் தங்கியிருந்து தனது அருள் அதிர்வுகளை விட்டுச் சென்றுள்ள புனிதமிக்க வெள்ளியங்கிரி மலை, தென்கைலாயம் எனப் போற்றப்படுகிறது. பன்னெடுங்காலமாகவே பல்வேறு சித்தர்களும், யோகிகளும், முனிவர்களும் தங்கள் காலடிச் சுவடுகளை பதித்து தங்களது அருளினை இம்மலைகளில் பதித்து சென்றுள்ளனர். இப்போதும்கூட அந்த அருள் நம்மை வெகுவாக ஆட்கொள்ளும் விதத்தில் சக்திமிக்கதாக உணரப்படுகிறது. இத்தகையதொரு பிரம்மாண்டமான சக்தி ஸ்தலத்தில், வெள்ளியங்கிரியின் ஏழாவது மலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
  யாத்திரை எதற்காக?
   
  யாத்திரை எதற்காக?
   
  சத்குரு: வழக்கமாக ஒரு பயணம், ஒரு சுற்றுலா செல்வதற்கும் ஒரு புனிதப் பயணத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன? மக்கள் பல்வேறு காரணங்களுக்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கிறார்கள். மனிதர்கள் செல்லாத புதிய நிலப்பரப்புகளை எப்போதும் தேடி அலைந்து தங்கள் கால்தடத்தைப் பதிக்க விரும்பும் சில பயண ஆர்வலர்கள் இருக்கின்றனர். அவர்கள் எதையாவது செய்துகாட்ட விரும்புகிறார்கள். அனைத்தையுமே ஒரு ஆர்வத்துடன் பார்க்கும் பயணிகள் சிலர் தங்கள் ஆர்வத்தின் பொருட்டு பயணிக்கிறார்கள். ஓய்வு எடுப்பதற்காகவே செல்லும் சுற்றுலா பயணிகள் உள்ளனர். தங்கள் குடும்பம் மற்றும் வேலையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே செல்லும் ஒருவகையான சுற்றுலா பயணிகளும் உள்ளனர். ஆனால், ஒரு யாத்திரிகர் இதில் எந்தவித காரணங்களுக்காகவும் பயணம் மேற்கொள்வதில்லை. ஒரு புனிதப் பயணம் என்பது வெற்றிகொள்வது அல்ல, அது ஒரு சரணாகதி ஆகும். வழியில் தடையாய் நீங்கள் இருப்பதிலிருந்து உங்களை நீங்களே விலக்கிக் கொள்வதாகும். ஒருவேளை நீங்கள் வழிக்கு வராவிட்டால், உங்களை நீங்களே கரைத்துக் கொள்வதாகும். எல்லைகளை, நிர்பந்தங்களை அழித்து, எல்லையில்லா விழிப்புணர்வு நிலையினை அடையும் செயல்முறையாகும்.
  அதிகம் வாசிக்க…
  சாதனா தேதி
   
  சாதனா தேதி
   
  ஆண்களுக்கான இந்த 42 நாட்கள் விரதம் பௌர்ணமி நாளன்று துவங்கி, சிவராத்திரி தினத்தன்று தியானலிங்கத்தில் நிறைவுறுகிறது. அன்றைய தினம் தியானலிங்கத்தில் அர்ப்பணிப்புகளை சமர்ப்பிப்பதோடு, பசுமையும் எழிலும் சூழ்ந்த வெள்ளியங்கிரி மலைக்கு ஒரு புனித யாத்திரை மேற்கொள்ளப்படும்.
  குறிப்பு: கொரோனா தொற்று காரணமாக தீட்சை மற்றும் நிறைவு செயல்முறைக்கு ஆன்லைனில் வசதி செய்யப்படும். தியானலிங்கத்தில் நிறைவு செய்வது மற்றும் வெள்ளியங்கிரி மலைகளுக்கு புனிதப் பயணம் செய்வது ஆகிய இரண்டும் விருப்பத் தேர்வாக இருக்கும்.
  தீட்சை
  நிறைவு தேதி
  யாத்திரை தேதி
  பிப்ரவரி 27
  ஏப்ரல் 10
  ஏப்ரல் 11
  மார்ச் 28 (பாங்குனி உத்திரம்)
  மே 9
  மே 10
  ஏப்ரல் 26
  ஜுன் 8
  ஜுன் 9
  மே 26
  ஜுலை 8
  ஜுலை 9
  ஜுன் 24 (தியானலிங்க பிரதிஷ்டை தினம், 22வது ஆண்டு)
  ஆகஸ்ட் 6
  ஆகஸ்ட் 7
  ஜுலை 23
  செப்டம்பர் 5
  செப்டம்பர் 6

  மொழிகள்:

  ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தமிழ் , மற்றும் தெலுங்கு

   

  ஆண்களுக்கான சாதனா வழிகாட்டுதல்கள்:

  • பௌர்ணமி தினத்தில் சாதனா துவங்கி 42 நாட்களுக்குப் பிறகு சிவராத்திரியில் (அமாவாசைக்கு முந்தைய நாள்) நிறைவடைகிறது.
  • சிவாங்காக்களுக்கு, சிவ நமஸ்காரம் பயிற்சி மற்றும் சாதனாவிற்குரிய மந்திரங்களுக்கான தீட்சை வழங்கப்படும்.
  • காலி வயிறு நிலையில், ஒரு நாளில், சூரிய உதயத்திற்கு முன் அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, சிவ நமஸ்காரம் பயிற்சியை 21 முறை பக்தியுடன் செய்ய வேண்டும்.
  • சிவராத்திரியன்று கோவையிலுள்ள தியானலிங்கத்திற்கு சிவாங்காக்கள் வருவது அவர்கள் விருப்பத்தைப் பொறுத்தது.
  • ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். சோப்புக்கு பதிலாக மூலிகை குளியல் பொடியைப் (ஸ்நானப் பொடி) பயன்படுத்தலாம்.
  • குறைந்தது 21 பேரிடமிருந்து பிக்‌ஷைப் பெறப்பட வேண்டும். (கட்டாயமில்லை)
  • விரத காலத்தில் புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் அசைவ உணவு சாப்பிடுவது கூடாது.
  • ஒரு நாளில் இருவேளை மட்டுமே சாப்பிட வேண்டும். முதல்வேளை உணவு மதியம் 12 மணிக்குப் பிறகு இருக்க வேண்டும்.
  • சாதனா காலத்தில் வெள்ளை நிற அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியலாம்.
  • சாதனாவிற்கு சிவாங்கா கிட் தேவை. ஈஷா லைஃபில் இந்த கிட்டை ஆர்டர் செய்து பெறலாம்.
  எப்படி இடத்தை அடைவது?
   
  எப்படி இடத்தை அடைவது?
   

  தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாநகரிலிருந்து மேற்கில் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, ஈஷா யோக மையம். விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்தில் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ள கோவை தென்னிந்தியாவின் மிகப்பெரிய தொழில்நகரமாகும். சென்னை, டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவிலிருந்து கோவைக்கு முக்கிய விமான சேவை நிறுவனங்களால் தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் அனைத்து பெரிய நகரங்களிலிருந்தும் கோவைக்கு ரயில் போக்குவரத்து உள்ளது.

  கோவையில் இருந்து ஈஷா யோக மையத்திற்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளன. விமான நிலையத்திலிருந்தும் ரயில் நிலையங்களிலிருந்தும் டாக்ஸி புக் செய்துகொள்ளலாம். அல்லது ஈஷா யோக மையத்தை தொடர்புகொண்டு ஈஷாவிற்கு வருவதற்கான டாக்ஸி புக் செய்யலாம்.

  இதற்கான உதவி மையம் 24 மணி நேரமும் திறந்திருக்கும்

  Ph: +91 8300083111 

  தொடர்புக்கு
   
  தொடர்புக்கு
   

  Contact Details:

  Email: info@shivanga.org

  Phone:  +91-83000 83111

  Contact List

  ஒரு செய்தியை விடுங்கள்

  பகிர்வுகள்