நவராத்திரி பாடல்கள்: திரிவேணி-தேவியின் அருள்வழங்கும் ஓர் இசைத்தொகுப்பு
நவராத்திரி பாடல்கள்: “திரிவேணி” - நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சத்குரு மற்றும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா வழங்கும் ஒரு இசை அர்ப்பணிப்பு!
நவராத்திரி விழாவின் சிறப்பு:
திரிவேணி அல்லது “மூன்று நதிகள்” தேவியின் மூன்று முக்கிய அம்சங்களான துர்கா, லக்ஷ்மி மற்றும் சரஸ்வதியை போற்றும்விதமாய் அமைந்துள்ளது! தெய்வீகப் பெண்தன்மையாக விளங்கும் தேவியின் பல்வேறு சக்தி அம்சங்களுக்கு ஒரு அர்ப்பணிப்பாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
முதல்மூன்று நாட்கள் ‘தமஸ்’ எனும் நிலையில் உக்கிரத் தன்மை கொண்டவளான தேவி துர்காவை முன்னிறுத்தி கொண்டாடப்படுகிறது. அடுத்த மூன்று நாட்கள் ‘ரஜஸ்’ தன்மையிலுள்ள பொருள்வளத்திற்கு உரிய தேவி லக்ஷ்மிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இறுதி மூன்று நாட்கள் ‘சத்வ’ குணத்திலுள்ள கற்றல் மற்றும் ஞானத்திற்கு உரியவளான தேவி சரஸ்வதிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. பத்தாவது நாளில், இருளை வெற்றிகொண்ட நாளாக ‘விஜயதசமி’ கொண்டாட்டத்துடன் நவராத்திரி விழா நிறைவுறுகிறது.
நவராத்திரி பாடல்கள்:
பாரதத்தின் தனித்துவமிக்க கலாச்சார திருவிழாவாக விளங்கும் நவராத்திரி, உற்சாகமும் அன்பும் நிறைந்த ஒரு விழாவாக கொண்டாடப்படுகிறது. திரிவேணி இசைத் தொகுப்பில் உள்ள இந்த நவராத்திரி பாடல்கள் தேவியின் பல்வேறு தெய்வீக அம்சங்களுக்கு ஒரு அர்ப்பணிப்பாகவும் தேவியின் அளப்பரிய அருளை வேண்டும் விதமாகவும் அமைந்துள்ளன.
இந்த இசைத்தொகுப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
லிங்கபைரவி தேவி:
தெய்வீகப் பெண்தன்மையின் மூன்று அடிப்படை அம்சங்களும் தன்னகத்தே கொண்ட சக்தி ரூபமாக லிங்கபைரவி தேவி இருக்கிறாள். 2010ல் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கபைரவி, தனது பிரம்மாண்ட சக்தியதிர்வுகளாலும் அருளாலும் கருணையாலும் நம்மை ஆட்கொள்கிறாள். வெள்ளியங்கிரி மலைச்சாரலில் குடிகொண்டுள்ள லிங்கபைரவியை தரிசித்து அருள்பெற்றிட நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
துர்கா
1. பைரவி பிரார்த்தனை - லிங்கபைரவியின் பல்வேறு குணங்களைப் போற்றிப் பாடும் இந்த ஸ்துதி சத்குருவால் உச்சாடனை செய்யப்பட்டுள்ளது! சிவனின் சரிபாதியாக இடப்பாகத்தில் அமைந்தவளும் ஆனந்த ஸ்வரூபினியாகவும் யோகத் திருவுருவாகவும் திகழும் இவள், உக்கிரமாகவும் அதே சமயத்தில் கருணை மிக்கவளாகவும் அருள்பாலிக்கிறாள்.
2. சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன்! - தேவியின்பால் கொண்ட பக்தியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள மகாகவி பாரதியின் கவிவளம் மிக்கம் பாடல்! “அவள் வலியையும் துயரையும் அகற்றி, நமது இதயங்களில் ஒளியையும் ஆனந்தத்தையும் நிறைக்கிறாள்.”
3. பைரவி ஷடகம் - பாரதத்தின் தலைசிறந்த ஞானிகளில் ஒருவரான ஸ்ரீஆதிசங்கரர் வழங்கியருளிய பாடல்களிலிருந்து பெறப்பட்டது. தேவியின் ஆதியும் அந்தமும் இல்லா தன்மைகளை அழகாக இந்த பாடல் எடுத்துரைக்கிறது. உக்கிர ஸ்வரூபினியாக அரக்கனை வதம் செய்து மண்டையோடுகளை மாலையாக அணிந்துகொண்டிருக்கிறாள் தேவி! இன்னொரு ரூபத்திலோ தேவி இப்பிறவிக்கு மட்டுமல்லாமல் பிறவிகள் கடந்த நிலைக்கும் தனது ஆசிகளை வாரிவழங்குகிறாள்.
Subscribe
லக்ஷ்மி
4. பைரவி வந்தனா/வந்தனம் - அனைத்து வளங்களையும் நலன்களையும் வாரிவழங்கக் கூடிய சக்திபடைத்த ரூபமாக அமைந்திருக்கும் லிங்கபைரவியிடம் பாதுகாப்பையும் முக்தியையும் வேண்டுவதாய் அமைந்துள்ளது!
5. தேவி தச ஸ்லோக ஸ்துதி - பாரதத்தின் தன்னிகரில்லா சம்ஸ்கிருத கவிஞர்களில் ஒருவரான காளிதாசர் எழுதியருளியது! அழகியல் நிறைந்த தனித்தன்மை வாய்ந்த தனது கவிதையால் காளிதாசர் சரணாகதியை வெளிப்படுத்துவதோடு, தேவியின் காலடியில் இருக்கும் தனது ஏக்கத்தை பாடல்கள் மூலம் உணர்த்துகிறார்.
6. துன்பம் இல்லா நிலையே சக்தி - சக்தி என்பவள் படைத்தல் சக்தியின் வடிவமாகவும், பெண்தன்மையின் அம்சமாகவும் விளங்குகிறாள். இந்த கவிதையில் மகாகவி பாரதி சக்தியைப் போற்றிப் பாடும்போது “வாழ்வு செழிக்கச் செய்யும் அருள்மடி” எனக் குறிப்பிடுகிறார்.
சரஸ்வதி
7. ப்ரதஸ்த்வே பர சிவம்பைரவி - வார்த்தைகள் மற்றும் மொழியின் கடவுளான சரஸ்வதி தேவியைப் போற்றுவதாக அமைந்துள்ள இந்த உச்சாடனத்தை ஸ்ரீஆதிசங்கரர் இயற்றியுள்ளார்.
8. ஜாகோ பைரவி - பைரவியை பிரார்த்தனை செய்து அழைப்பதாக அமைந்துள்ளது. தேவியின் இதயத்தில் இடம்பெற வேண்டுமெனவும், பிறவிப் பெருங்கடலை கடந்து செல்ல வேண்டுமெனவும், தேவியின் காலடியில் சரணடையவும் தேவியை ஏக்கத்துடன் அழைக்கிறார் பக்தர்.
9. பகவதி ஸ்துதி - தன்னைச் சரணடைந்தவர்களின் துயர்களை துடைத்தெறியும் சக்தியாக வீற்றிருக்கும் தேவி, அறியாமை எனும் இருளகற்றி, தெளிந்த ஞானத்தை வழங்கவல்லவள்!
விஜயதசமி
10. வித்யாரம்பம் உச்சாடனம் - சத்குருவால் உச்சாடனம் செய்யப்பட்டுள்ள இந்த சக்திவாய்ந்த ஸ்துதி கல்வி-ஞானம் மற்றும் கலைகளின் உலகத்திற்கு பிரவேசிக்கும் ஒரு புதிய பாதையின் புனித துவக்கத்தை முன்னிறுத்துவதாய் அமைந்துள்ளது. அறியாமை இருளை வென்ற வெற்றியைக் குறிக்கும் நாளான விஜயதசமி நாளில், சரஸ்வதி தேவியின் அருளைப் பெறவேண்டி இந்த உச்சாடனம் செய்யப்படும். குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்விற்காக லிங்கபைரவியில் வழங்கப்படும் பல்வேறு ஆன்மீக செயல்முறைகளில் வித்யாரம்பம் குறிப்பிடத்தகுந்த ஒன்று!
குறிப்பு:
லிங்கபைரவியில் இவ்வருட நவராத்திரி கொண்டாட்டங்கள் பற்றி இந்த பதிவின் மூலம் அறிந்திடுங்கள்!
சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இன்னிசையில் உருவான மேலும் சில நவராத்திரி பாடல்கள் மற்றும் தேவி பாடல்களை இங்கே இணைத்துள்ளோம். கேட்டு தேவியின் அருளில் திளைத்திடுங்கள்!