மாரத்தான் போட்டியில் கலந்துகொள்வதற்காக அன்று காலை 2:30 மணிக்கு எழுந்து கொண்டேன். ரெடியாகி நண்பர்களை அழைத்துக் கொண்டு பந்தய இடத்திற்கு சென்றிருந்தேன். காலை 4:30-க்கு போட்டி துவங்கியது. 

3 மணிநேரம் ஓட்டம். சிறிது ஓய்வு, உணவுக்கு பின் 9 மணிக்கு அங்கிருந்து கிளம்பி 10 மணிக்கு வீட்டுக்கு போய்விடலாம் என்று நினைத்திருந்தேன்.

அன்று எனக்கு விடுமுறை இல்லை. மதியம் 1 மணிக்கு கட்டாயம் அலுவலகம் செல்லவேண்டியது இருந்தது. 10-12 வரை 2 மணிநேரம் தூங்கிய பிறகு வேலைக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் நான் வீட்டுக்கு வருவதற்கே 11:30 ஆகியிருந்தது. ஓய்வெடுக்காமல் பணிக்கு சென்றால் கட்டாயம் அங்கே வேலையும் நடக்காது. எனக்கும் உடல்நிலை சரி இருக்காது என்று தெளிவாகப் புரிந்தது. அத்தனை சோர்வும், தூக்கமும் இருந்தது.

நேரமோ மிக குறைவு. கட்டாயம் அலுவலகம் செல்ல வேண்டும். அப்போது தான் சூன்ய தியானம் ஞாபகம் வந்தது. நீண்ட நாட்களாக சூன்ய தியானம் செய்யாமலே விட்டிருந்தேன். திடீரென செய்தால் எந்தளவுக்கு வேலை செய்யும் என்ற சந்தேகம் இருந்தது. எனக்கு அதை விட்டால் வேறு வழியுமில்லை. சூன்ய தியானத்தில் அமர்ந்தேன். 15 நிமிடங்களில் உடல் மீண்டும் உயிர்பெற்றது. சோர்வு பறந்தது உற்சாகம் நிறைந்தது. ஆச்சர்யமா இருக்கு. எனக்குள்ள தியானம் நடக்கிறது.

பணியிடத்தில் கால் வலியை தவிர பெரிதாக எனக்கு சோர்வே ஏற்படவில்லை. பரபரப்பான பணிச்சூழலில் எளிமையாக கடந்து சென்றது நிமிடங்கள். தியானத்தின் மகத்துவம் புரியாமலே மக்கு மாதிரி பயன்படுத்தாமல் இருந்திருக்கிறேன். சூன்ய தியானம் எனக்குள் விதைக்கப்பட்டுள்ளது; அதை வளர்க்க வேண்டுமென புரிந்துக் கொண்டேன்.

(சூன்ய தியானம் என்பது ஈஷாவில் கற்றுத்தரப்படும் ஒரு உயர்நிலை தியானம். புத்தர் தனது சிஷ்யர்களுக்கு சூன்யதியானம் கற்றுக்கொடுத்த பதிவுகள் இருக்கின்றன. மனதை பயன்படுத்தாமல் செய்யக்கூடிய ஒரே தியானம் "சூன்ய தியானம்" என்கிறார்கள். இந்த தியானம் 15 நிமிடங்கள் வரை நிகழும். இதை முடித்த பிறகு 4 மணி நேரம் தூங்கி எழுந்தால் எவ்வளவு உற்சாகம் இருக்குமோ, அதே போல் உடலும், மனமும் புத்துணர்வு பெறும். இதைப்பற்றி இன்னும் பல ஆழமான தகவல்கள் இருக்கின்றன… அதை வெளியே சொல்ல விரும்பவில்லை)

- பியல் கெய்ன்
  சென்னை

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.