பரபரப்பான ஆஃபீஸ் சூழலில் ராதாவும், ருக்குவும் உணவு இடைவேளையில் சந்தித்துக் கொண்டனர். வெவ்வேறு துறையாக இருந்தாலும் ராதாவும், ருக்குவும் நீண்டகால தோழிகள்.

ராதா: ஹாய் ருக்கு, எப்படி இருக்க? ஒரு வாரம் லீவுன்னு சொன்ன, எப்ப வந்த? ஏன், என்னாச்சு?

ருக்கு: இன்னிக்குதான் வந்தேன் ராதா!

ராதா: ரொம்ப இளச்சிட்ட போல, உடம்பு ஏதாவது சரியில்லையா?

ருக்கு: ஆமா... ரொம்ப நாளாவே tiredஆ இருந்துச்சு. நல்லாதான் சாப்பிட்டேன், ஆனாலும் ரொம்ப உடம்பு இளச்சிக்கிட்டே போகுது.

ராதா: டாக்டர் பாத்தியா, என்ன சொன்னாரு?

ருக்கு: பார்த்தேன், blood test எல்லாம் பண்ணாங்க. கொலஸ்ட்ரால், சுகர் இருக்குன்னு சொல்லிட்டாரு. என்ன பண்றதுன்னே தெரியல, கவலையாருக்கு. இந்த சின்ன வயசுலேயே sugar வந்துடுச்சு. நான் எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியல ராதா?!

ராதா: சரி கவலப்படாதே! கவலைப்பட்டு ஒண்ணும் ஆகப்போறதில்ல. இனிமே sugar control எப்படி பண்ணிக்கறதுன்னு பார்க்கலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ருக்கு: இல்லப்பா, சர்க்கரை ரொம்ப ஜாஸ்தியா இருக்குன்னு டாக்டர் சொன்னாரு. இப்போதைக்கு நிறைய மருந்துகள் கொடுத்திருக்காரு. வாழ்நாள் பூரா சாப்பிடணும்ன்னு சொல்லிட்டாரு. அதுதான் கஷ்டமா இருக்கு. கண்டிப்பா வாக்கிங் போகணும்ன்னு சொல்லிட்டாரு. எனக்கு எங்க டைம் இருக்கு?!

ராதா: கவலைப்படாத ருக்கு, என்னோட அண்ணனுக்கு 3 வருஷமா sugar இருக்கு. ஆரம்பத்துல ரொம்ப ஜாஸ்தியா இருந்து கஷ்டப்பட்டாரு. இப்ப நல்லா ஆரோக்கியமா இருக்காரு.

ருக்கு: அப்டியா! என்ன பண்ணாரு, எப்படி மேனேஜ் பண்ணிட்டிருக்காரு?

ராதா: அவரும் நிறைய மாத்திரைதான் ஆரம்பத்துல எடுத்துக்கிட்டிந்தாரு. அப்புறம் அவரோட நண்பர் மூலமா ஈஷா லைப்-ல Diabetes Management Program கேள்விப்பட்டு அதுல கலந்துக்கிட்டாரு. அவங்க சொன்ன மாதிரி யோகா, உணவு, ஆயுர்வேதா, சித்த மருந்து எல்லாம் கடைப்பிடிக்கிறாரு. இப்ப சர்க்கரை அளவு நல்லா கன்ட்ரோல்க்கு வந்துடுச்சு, ஆரோக்கியமா இருக்காரு.

ருக்கு: எனக்கும் டாக்டர் வாக்கிங், உணவு பழக்கம் பத்தியெல்லாம் சொன்னாரு. ஆனா, உணவு கட்டுப்பாடு ரொம்ப கடுமையா இருக்கு. அதனால சாப்பிடவே பிடிக்கல. வாக்கிங் போக எங்க நேரமிருக்கு?!

ராதா: ஈஷா லைஃப்ல யோகாவை முறைப்படி கத்துக் குடுக்கறாங்க. அத நீ வீட்டிலேயே பண்ணிக்கலாம். உணவு பத்தி கவலைப்படாதே. சாப்பாட்ட பொறுத்த வரைக்கும் மத்தவங்க மாதிரியே நீயும் சுவையாவே சமைச்சு சாப்பிடலாம். ஆனா நமக்கு ஆரோக்கியமான உணவுன்னா என்னன்னு தெரியறதே இல்ல. Diet advice கொடுக்கறாங்க. அது வேற இல்லாம சமைச்சும் காட்டறாங்க. ஆரோக்கியமான உணவை சுவையா சமைச்சு சாப்பிட்டா சர்க்கரை நல்ல கன்ட்ரோல்க்கு வருது. எங்க அண்ணனோட சேர்ந்து நாங்க எல்லாருமே வீட்டில அந்த சாப்பாடத்தான் சாப்டறோம்ன்னா பாத்துக்கோயே. இப்ப அண்ணன் படிப்படியா அலோபதி மருந்து குறைச்சிட்டாரு. இந்த மருந்து எடுத்ததுக்கப்புறமா சர்க்கரை கட்டுப்பாடுக்கு வந்து சந்தோஷமா இருக்காரு.

ருக்கு: நீ சொல்றது ரொம்ப உற்சாகமாவும், சந்தோஷமாவும் இருக்கு. வேற என்னல்லாம் சொல்லித் தர்றாங்க ஈஷா லைஃப்ல?

ராதா: தினப்படி வாழ்க்கையில என்னென்ன பழக்கத்தை கடைப்பிடிச்சி ஆரோக்கியமா இருக்கறது என்பது பத்தி முழுமையா சொல்லித் தர்றாங்க. தலையில எண்ணை தேய்ச்சி குளிக்கறதுல இருந்து கால் பராமரிப்பு வரை சொல்லித் தர்றாங்க. அதோட மட்டுமில்லாம யோக பயிற்சியும் கத்துத் தர்றாங்க.

ருக்கு: ஓ! யோகா கஷ்டமா இருக்குமா?

ராதா: இல்லவே இல்ல, ஈஷா ஹட யோகா கத்து தர்றாங்க. எல்லாருமே இந்த பயிற்சி பண்ணலாம். நம் உடம்புக்கு தகுந்த மாதிரி யோகப் பயிற்சி இருக்கறதுனால எளிமையா தினமும் பண்ண முடியும்.

ருக்கு: டாக்டர்ஸ் கன்சல்டேசன் எப்படி இருக்கும்?

ராதா: அலோபதி, ஆயுர்வேதா, சித்தா டாக்டர்ஸ் பாப்பாங்க. நம்ம சர்க்கரை அளவுக்கு ஏத்த மாதிரி மருத்துவ ஆலோசனையும், சித்தா, ஆயுர்வேதா மருந்துகளும் கொடுப்பாங்க.

ருக்கு: மருந்து அங்கேயே கிடைக்குமா?

ராதா: ஆமா... அங்க மருந்து மட்டுமில்லாம வரகு, தினை போன்ற சிறுதானியங்கள், சர்க்கரைக்கு உகந்த ஹெர்பல் டீ, காபி பவுடர் எல்லாமே கிடைக்கும்.

ருக்கு: அடுத்த புரோகிராம் எப்ப இருக்கும், ஈஷா லைப் அட்ரஸ் கொஞ்சம் சொல்லு ராதா...!

ராதா: ஈஷா லைப் ஹெல்த் சொல்யூஷன்ஸ், 2, கிளப் ஹவுஸ் ரோடு, தாஜ் கிளப் ஹவுஸ், மௌன்ட் ரோடு, சென்னை-2.

தொடர்புக்கு: (044) 28885333/ 71645333/ அலைபேசி: 8300045333
email: programs@ishalife.org
www@ishalife.org