சத்குருவுடன் ஈஷாங்கா 7% கூட்டு...
ஈஷாங்கா 7% கூட்டு சேர்வதன் மூலம் சத்குருவிடமிருந்து "நன்மை உருவம்" பெற்றிடுங்கள். ஈஷாங்கா 7% கூட்டு வைத்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கை எப்படி மேம்படும்? விளக்கம் இந்தக் கட்டுரையில்...
 
 

ஈஷாங்கா 7% கூட்டு சேர்வதன் மூலம் சத்குருவிடமிருந்து "நன்மை உருவம்" பெற்றிடுங்கள். ஈஷாங்கா 7% கூட்டு வைத்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கை எப்படி மேம்படும்? விளக்கம் இந்தக் கட்டுரையில்...

கைலாயத்தை அடைவதற்காக பல ஆண்டுகளாக கால்நடையாக யாத்திரை மேற்கொண்டார் அந்த சிவ பக்தர். கரடு முரடான பாதை, செங்குத்தான மலை என ஏறுபவரை மிகவும் சிரமம் கொள்ளச் செய்தது அந்த யாத்திரை. “சிவனே எனக்கு நீங்கள் மலையேற்றத்தில் உதவ மாட்டீர்களா” என அவர் கேட்டார்? அங்கே சிவன் தோன்றினார்.

சத்குரு தன்னார்வத் தொண்டர்களைப் பற்றிக் கூறும்போது “இவர்கள் தன்னார்வத் தொண்டர்கள் அல்ல, எனது கரங்கள்,” என்பார்.

“நான் உன்னுடனேயே இருக்கிறேன். நீ நம்பிக்கையுடன் யாத்திரையை தொடர்ந்து செல்!” என்றார்.

“நான் எப்படி இதை நம்புவது?” என அவர் கேட்க, “உன் பின்னால் எனது காலடிச் சுவடுகள் வருவதை நீ பார்ப்பாய், அதை வைத்து நான் இருப்பதை நீ உறுதி செய்து கொள்ளலாம்,” என்றார் சிவன். தன் பாதச் சுவடுகளுடன் சேர்த்து, நான்கு பாதச் சுவடுகள் இருப்பதை கண்ட பக்தர், யாத்திரையில் சிவன் தன்னுடனே இருப்பதை எண்ணி மகிழ்ந்தார்.

மிகவும் கடினமான பாதையில் பக்தர் நுழையும்போது நான்கு காலடிகள் மறைந்து, இரண்டே பாதச் சுவடுகள் இருப்பதைக் கண்டவருக்கு சந்தேகம் தோன்றியது. சிவனே என்னை இப்படி கைவிட்டு விட்டாயே எனப் புலம்பினார்.

“கவனி, நீ அமர்ந்திருப்பது என் தோளில், அந்தச் பாதச்சுவடுகள் என்னுடையது!” என்றார் சிவன்.

நம்மை விட மிகப் பெரிய சக்தி நம் அருகில் இருந்து செயல்படுவதை நம்மால் உணர முடிவதில்லை. ஆனால் அதனை உணர்ந்தவர்களோ அந்தச் சக்தியின் முன் தங்களை மிகச் சிறிதாக உணர்கிறார்கள். தங்களையே அந்தச் சக்திக்கு அர்ப்பணிக்க விழைகிறார்கள்.

கனவே, சத்குருவின் நோக்கம் நிறைவேற உலகம் முழுவதும் தற்போது லட்சக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் தங்கள் பங்களிப்பை அளித்து வருகிறார்கள். இவர்களில் பலரும், சத்குரு என்ற பிரம்மாண்டத்தால் தனது உள்நிலை தொடப்பட்டு அவரது பணியில் தங்களையே முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார்கள்.

சத்குரு தன்னார்வத் தொண்டர்களைப் பற்றிக் கூறும்போது “இவர்கள் தன்னார்வத் தொண்டர்கள் அல்ல, எனது கரங்கள்,” என்பார்.

அலுவலகக் கடமை, குடும்ப சூழ்நிலை போன்ற பல காரணங்களால் சத்குருவின் செயல்களுக்கு தன்னை முழுமையாய் அர்ப்பணிக்க முடியாத ஈஷா தியான அன்பர்கள், உடலளவில் தங்கள் தொழிலை செய்து வந்தாலும் தங்கள் இதயங்களை அவரிடம் அர்ப்பணித்து வருவதை இத்தனை வருட ஈஷா வரலாறு தெளிவாக உணர்த்துகிறது.

சத்குரு தனது கருணையினால், தனது அங்கமாக திகழ அனைவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளார். அதுவே சத்குருவுடன் 7% கூட்டு...

ஈஷா திட்டங்களின் வெற்றி பற்றி சத்குரு கூறும்போது, "எனது கூட்டாளி சிவனிடம் நான் 50% கூட்டு வைத்துள்ளேன். அவன் ஒன்றும் செய்வதில்லை என்றாலும் அவனே அனைத்திற்கும் ஆதாரமாய் இருக்கிறான்," என்று சொல்வதுண்டு.

சத்குரு அவர்கள் தனது உயிர்சக்தியை நமது ஆன்மீக வளர்ச்சிக்காக பல்வேறு வழிகளில் வழங்கி வருகிறார். “எனது அருள் ஆன்மீக வளர்ச்சிக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் நான் மிக உறுதியாக இருந்தேன். ஆனால், இப்போது என்னை பலவிதங்களிலும் வழங்க விழைந்துள்ளேன். ஏனெனில், ஒரு மனிதனின் குடும்பம், சமூகம், பொருளாதாரம் போன்றவற்றை சிரமமின்றி நிகழ்த்த அவனது செயல்களை ஒருவித அருளைக் கொண்டு நிரப்பும்போது, அவனால் அவனது உச்சபட்ச நன்மைக்காக அதிக நேரத்தை செலவிடமுடியும் என நான் நம்புகிறேன்.

இது 7% பற்றியதல்ல. “நான்”, “எனது” என்பதிலிருந்து ஒரு 7 சதவிகிதத்தை நீங்கள் குறைத்தால் அந்த இடத்தை ஒரு உயர்ந்த சாத்தியத்தை கொண்டு நிரப்பலாம். "நான்" என்ற எல்லையை உடைத்தால், பிறவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களை விட மிகப் பிரம்மாண்டமான ஒரு சக்தியை உங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக்கிக் கொள்ள உருவாக்கப்பட்ட கருவி ஈஷாங்கா,” என்கிறார்.

சத்குருவிடம் 7% கூட்டு வைத்திருக்கும் அன்பர்களுக்கு சக்தி வாய்ந்த நன்மை உருவம் வழங்கப்படுகிறது. நன்மை உருவம் என்பது செம்பினால் ஆன, பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி வாய்ந்த உருவம். இது தியானலிங்கத்தின் சக்தி வளையத்திற்குள் வைக்கப்பட்டு, பல்வேறு செயல்பாட்டினால் சக்தியூட்டப்பட்டு, ஈஷாங்கா 7 சதம் கூட்டாளிகளுக்கு சத்குருவால் வழங்கப்படுகிறது. இதிலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் வீட்டின் சூழ்நிலையையே மாற்றிவிடுவது பலருக்கும் அனுபவ சாட்சியான உண்மை.

நன்மை உருவம் வழங்கும் நிகழ்வில், சத்குரு அவர்கள் பங்கேற்பாளர்களுக்கு, அந்த அருள் சக்தியுடன் இணைந்திடும் வண்ணம் தீட்சை வழங்குவார்.

பகிர்தல்கள்:

பம்மலில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்யும் திரு. மோகன் அவர்கள், “நன்மை உருவத்தின் அதிர்வுகள் வீட்டின் சூழ்நிலையை மட்டுமல்ல என் எண்ண ஓட்டத்தையே மாற்றியது. எனது அலுவலகம் மற்றும் வேலை என்று மட்டுமே இருந்த நான், சொந்தத் தொழில் பற்றி சிந்திக்கத் துவங்கினேன். சொந்தத் தொழில் துவங்க நான் செய்த செயல்களில் எல்லாம் வெற்றி கிடைத்தது. கூடிய விரைவில் நான் சுயதொழிலைத் துவங்கி விடுவேன்,” என்கிறார்.

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சிவில் இஞ்சினியர் அமுதா இதைப் பற்றி சொல்லும்போது, "எங்கள் கம்பெனி கான்ட்ராக்டில் நிறைய குழப்பங்கள் இருந்தது. சம்பளம் கிடைப்பதே பெரிய பிரச்சனையாக இருந்தது. ஆனால் நன்மை உருவம் பெற்றபின், திட்ட பொறியாளர் (planning engineer) பதவியிலிருந்து திட்ட ஒருங்கிணைப்பாளராக (planning coordinator) எனக்கு பதவி உயர்வு கிடைத்தது. எனக்கு 18 சதவிகிதம் சம்பள உயர்வும் கிடைத்துள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேல் நன்மை உருவம் ஏற்படுத்தும் அதிர்வுகள் எங்கள் வீட்டையே தெய்வீகமாக மாற்றி அமைத்துள்ளது. சத்குருவின் இருப்பை உணர்ந்திடும் விதமாக இருக்கும் இந்த நன்மை உருவத்தின் முன் அமர்ந்தாலே என் கண்களிலிருந்து நீர் பெருகுகிறது," என்று கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டார்.

அதுமட்டுமல்ல, “இது கொஞ்சம் அநியாயமான கூட்டு. நீங்கள் 7% கொடுக்க வேண்டும். நான் மீதமுள்ள 93% கொடுக்க வேண்டும்,” என்று சத்குரு நகைச்சுவையாக கூறும் வார்த்தைகளின் பொருள் இவர்களின் பகிர்வுகளிலிருந்து புரிகிறது.

நீங்களும் சத்குருவுடன் ஈஷாங்கா 7% கூட்டணி வைத்துக் கொள்ள முடியும். விருப்பமுள்ளவர்கள் 9442504655 என்ற எண்ணையோ அல்லது 7percent@ishafoundation.org என்ற இமெயிலையோ தொடர்பு கொள்ளலாம்.

இதைப்பற்றி மேலும் அறிய

ஈஷாங்கா 7% - ஆன்லைனில் பதிவு செய்ய

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1