நில்... கவனி... சாப்பிடு! - பகுதி 6

"முந்திரிக் கொட்ட மாதிரி ஏம் முந்திக்கிட்டு வர்ற?" இப்படி ஸ்கூல் டீச்சரிடம் நீங்கள் திட்டு வாங்கியிருக்கலாம். ஆனால் முந்திரி போன்ற கொட்டை வகை உணவுகளில் ஒளிந்துள்ள சத்துகள் பற்றி தெரியுமா உங்களுக்கு?! இதோ கொட்டை வகை உணவுகளின் முக்கியத்துவங்கள், படித்து அறியுங்கள்!

சத்துள்ள உணவு வகைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, கொட்டை வகைகளைத் தொடர்ந்து உண்பதால் ஆரோக்கியம் அதிசயிக்கும் அளவு முன்னேற்றம் அடைகிறது என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

மக்கள் பயன்படுத்தும் கொட்டை வகைகளில் பாதாம் கொட்டைகள், கடலைகள், பிஸ்தா கொட்டைகள், முந்திரி இவற்றை முதன்மையானவை என்று கூறலாம். நீங்கள் அதிகமாய் பயன்படுத்தும் தேங்காயும் கொட்டை வகையைச் சேர்ந்ததுதான்.

கடினமான ஓட்டுக்குள் இருக்கும் விதைகளையே கொட்டை வகைகள் என்கிறோம். பல விதங்களில் இவற்றை உணவோடு சேர்த்துப் பயன்படுத்தலாம். இனிப்புகள், கேக்குகள், பிஸ்கட்டுகள் போன்றவை சில உதாரணங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகின் ஒவ்வொரு கண்டத்திலும் மனிதர்களின் முக்கிய உணவாக கொட்டை வகைகள் இருக்கின்றன. கொழுப்புச் சத்து இல்லாத இவை, மனிதர்களுக்கு ஆரோக்கியத்தை வழங்குவதோடு நோய் ஆபத்தை நீக்கவும் உதவுகிறது. இருதய நோய் வராமல் தடுக்கவும் சர்க்கரை நோயைக் களையவும் இது உதவியாக இருக்கிறது. எலும்பின் அமைப்பு முழுவளர்ச்சி பெறவும், இன்சுலின் இயக்கம் சரிவர நடக்கவும் இவற்றின் பங்களிப்பு அதிகம். புற்று நோய் மற்றும் தீராத நோய்களைத் தடுக்கும் சில மூலக்கூறுகளும் கொட்டை வகைகளில் உண்டு.

கொட்டை வகைகளில் பலவிதமான வைட்டமின்களும் குறிப்பாக, A, E வைட்டமின்களும், நார்ச்சத்தும், தாது உப்புக்களும் உள்ளன. புரதச் சத்தை மேம்படுத்தும் மிகச் சிறந்த உணவுப் பண்டம் இந்தக் கொட்டை வகைகள்தான். ஆனால் அதிகமாக உண்ணத் தேவையில்லை. அப்படி உண்பதால், உடல் எடை அதிகரிக்கக்கூடும். கார்போஹைட்ரேட்டும் எண்ணெயும் இதில் அதிகம் என்பதால், அளவுக்கதிகமாய் உண்பது மந்தமாக்கும். கூடுதலாக உணவோடு சேர்ப்பதற்குப் பதிலாக, உணவில் ஒரு பகுதியைக் குறைத்துக்கொண்டு கொட்டை வகைகளைச் சேர்ப்பதே சரியான விகிதம். ஒரு நாளைக்கு 25-50 கிராம் போதுமானது.

கொட்டை வகைகளைப் பச்சையாகவும் வறுத்தும் சாப்பிடுகின்றனர். பொதுவாக, வறுக்காமல் அப்படியே சாப்பிடுவதுதான் சிறந்தது. வறுத்து சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துக்கள் குறைய வாய்ப்புண்டு. சுவைக்காக உப்பும், மிளகும் சேர்த்து சாப்பிடுகிறார்கள். அதைவிட அப்படியே பச்சையாகச் சாப்பிட்டுப் பாருங்கள். அந்தச் சுவை பழகிவிடும். பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகளை அரைத்து பாலில் கலந்தும் பருகலாம்.

மக்கள் பயன்படுத்தும் கொட்டை வகைகளில் பாதாம் கொட்டைகள், கடலைகள், பிஸ்தா கொட்டைகள், முந்திரி இவற்றை முதன்மையானவை என்று கூறலாம். நீங்கள் அதிகமாய் பயன்படுத்தும் தேங்காயும் கொட்டை வகையைச் சேர்ந்ததுதான்.

ஆனால், கொட்டை வகைகளை உண்பதால் அலர்ஜி தொந்தரவால் அவதிப்படுபவர்களும் சிலர் உண்டு. அப்படிப்பட்டவர்கள், அவற்றைத் தவிர்ப்பதே நல்லது!

அடுத்த வாரம்...

பழங்கள் சாப்பிடுவதன் அவசியத்தையும் அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதையும் வரும் வாரத்தில் தெரிந்துகொள்ளலாம்!


நில்... கவனி... சாப்பிடு! தொடரின் பிற பதிவுகள்