வெள்ளை ஆப்பம்

vellai-appam

ஈஷா ருசி

ஆப்பம் – இலங்கையிலும் தமிழ்நாட்டிலும், குறிப்பாக செட்டிநாட்டில் அதிகமாக செய்யப்படும் உணவுகளில் ஒன்று. ஆப்பங்களில் பல வகை இருந்தாலும், இங்கே கொடுக்கப்பட்டுள்ள வெள்ளை ஆப்பத்தை ட்ரை செய்து பாருங்கள்… தோசை பிரியர்களுக்கு ஒரு மாற்று விருந்து இது.

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி – 2 கப்
புழுங்கல் அரிசி – 2 கப்
தேங்காய் – ஒரு மூடி
சர்க்கரை – தேவையான அளவு
சமையல் சோடா பவுடர் – 1 சிட்டிகை
உப்பு – சிறிதளவு

செய்முறை:

  • பச்சை அரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் சம அளவு ஊற வைத்து கிரைண்டரில் நன்றாக அரைத்து சிறிதளவு உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • மறுநாள் ஒரு தேங்காய் திருகி நன்றாக அரைத்து (ஆப்பத்திற்கு தொட்டு சாப்பிட தேவையான அளவு தேங்காய் பால் இதிலிருந்தே வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்) மாவுடன் சேர்த்து 1 சிட்டிகை (சமையல்) சோடா பவுடர் போட்டு கரைத்து இளம் சூட்டில் ஆப்பசட்டியில் ஊற்றி எடுக்க வேண்டும்.
  • ஆப்பத்திற்குத் தொட்டுக் கொள்ள எடுத்து வைத்த தேங்காய் பாலுடன் தேவையான அளவு சர்க்கரையை (விருப்பமென்றால் சிறிதளவு ஏலக்காய் பொடி, சுக்கு பவுடர்) சேர்த்துக் கொள்ளலாம்.
  • மேலும், சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி, வெல்லம் இரண்டையும் சமஅளவு பாகுவாக்கி மாவில் கலந்து இனிப்பு ஆப்பமாக ஊற்றலாம்.இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert