படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களில் பெரும்பாலானோர், தங்கள் தகுதிக்கு தகுந்த வேலை மட்டுமே எதிர்பார்த்து தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு வேலை கிடைப்பதே சிரமமாகிறது. அப்படிப் பட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒரு விண்ணப்பம் இங்கே...

"ஏதோ ஒரு பட்டம் வாங்கிட்டா போதும் அவன் எப்படியும் பொழச்சுக்குவான்!" என்பது சில காலத்திற்கு முன் பெற்றோர்களின் தாரக மந்திரமாக இருந்தது. அதற்கடுத்த காலகட்டத்தில், "ஏதோ ஒரு பட்டம் போதாது, என் மகன் இஞ்சினியராக வேண்டும். அப்போதுதான் அவன் கைநிறைய சம்பாதிப்பான்!" என அப்ளிகேஷன் வாங்க முண்டியடித்தனர். இப்போது பார்த்தால், எங்கெங்கும் இஞ்சினியரிங் மாணவர்கள் நிறைந்திருக்கிறார்கள்... ஆனால் சரியான வேலை தான் இல்லை. "ஓ..! நீயும் இஞ்சியனியர்தானா?! என்ன கொடுமை இது!" என்று ஒருவரையொருவர் நையாண்டி செய்துகொள்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
இன்று வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை ஏன் அதிகமாக இருக்கிறது என்று ஆராய்ந்தால் அதற்கு பல காரணங்கள் நம் முன் நிற்கும். அவற்றுள் முக்கியமான ஒன்று மக்கள் தொகைப் பெருக்கம்.

ஏன் இந்த நிலை?! எங்கே செல்கிறது இளைய தலைமுறை? பிள்ளையின் விருப்பத்தை ஏற்காமல், தான் நினைப்பதையே தன் பிள்ளை படிக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் சர்வாதிகாரப் போக்காலும், மாணவர்களுக்கே தங்கள் உண்மையான திறன் என்ன என்று அறிவதில் குழப்பம் இருப்பதாலும் தங்கள் கல்வியை கடனேயென்று முடித்து வைக்கிறார்கள். ஈடுபாடு இல்லாத கல்வியால் அவர்கள் பெறும் சொற்ப மதிப்பெண்களும், அறவே பெறாத தொழில் அறிவும், அனுபவப் பாடம் தரும் பட்டறிவும் இன்றி, அவர்கள் போட்டிகள் நிறைந்த துறைகளில் நிலைத்து நிற்க முடியாமல் திண்டாடுகிறார்கள். பந்தய மைதானமாய் ஆகிவிட்ட சமூகத்தில், அந்தப் பந்தயத்தில் பங்கேற்கவே திராணியற்று, விலகி நிற்கிறார்கள்.

இந்தச் சூழல் மாறுவதற்கு அரசியல் மற்றும் சமூக நிலைகளில் பல்வேறு மாற்றங்களும் சீர்திருத்தங்களும் தேவைப்படுகின்றன. உடனே அனைவருக்கும் வேலை வாய்ப்போ சரியான கல்வி முறையோ அமைந்துவிடுமென்று எதிர்பார்ப்பது புத்திசாலித்தனமாக இருக்காது. ஆனால், இன்று வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை ஏன் அதிகமாக இருக்கிறது என்று ஆராய்ந்தால் அதற்கு பல காரணங்கள் நம் முன் நிற்கும். அவற்றுள் முக்கியமான ஒன்று மக்கள் தொகைப் பெருக்கம்.

காரணங்களை ஆராய்வது ஒருபுறம் இருந்தாலும், இப்போது வேலையில்லாமல் சுற்றித்திரியும் இளைஞர்களை என்ன செய்வது? நிறைய இளைஞர்கள் தங்கள் தகுதி என்னவென்று புரிந்துகொள்ளாமலேயே தங்கள் நேரத்தையும் திறமையையும் வீணடிப்பவர்களாய் கொரியர்-பீட்ஸா டெலிவரி பாயாகவும், கால் டேக்ஸி டிரைவர்களாகவும், ஷாப்பிங் மால் பில்-கவுன்ட்டர்களிலும் தங்கள் காலத்தை கழிக்கிறார்கள். எந்த வேலையும் கீழானது இல்லை என்றாலும், நமக்கு தகுதியற்ற வேலையில் நம் காலத்தை செலவிடுவதும்கூட ஒருவகையில் குற்றம் தான்.

சரி...! இந்நிலைக்கு தீர்வுதான் என்ன? இன்றைய வேலையில்லா பட்டதாரிகள் வேலையை பிறரிடம் வேண்டுபவராக இல்லாமல், தங்களுக்கான வேலையை உருவாக்குபவராக மாறினால் நிச்சயம் தீர்வு கிடைக்கும். அத்தகைய ஒரு வழியாக விவசாயம் நிச்சயம் இருக்கும். படித்தவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால், இத்தனை வருடம் படித்ததெல்லாம் வீணாகிடும் என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். ஷாப்பிங்-மால் பில் கவுண்டரில் இருந்தால் மட்டும், நீங்கள் படித்ததற்கு பிரயோஜனம் இருக்கிறது என்றா சொல்வீர்கள்? ஆனால், படித்தவர்கள் விவசாயத்திற்கு வரும்போது, அதை இன்னும் திறம்படக் கையாள முடியும். இணையதளங்கள் மூலமகாவும், விவசாயம் மற்றும் இயற்கை சார்ந்த அமைப்புகள் மூலமாகவும் இளைஞர்கள் தங்களுக்கான வழிகாட்டுதல்களை இலகுவாகப் பெற முடியும். இன்று பல பட்டதாரிகள் விவசாயத்தில் சாதித்து வருகின்றனர்.

இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஈஷா பசுமைக் கரங்கள்!

ஈஷா அறக்கட்டளை, ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பவ்வேறு செயல்களை தமிழகமெங்கும் செய்துகொண்டிருக்கிறது. அதில் ஒன்று விவசாயிகளுக்கு உறுதுணையாய் இருக்கும் வேளாண் காடுகள். இன்று பல்வேறு காரணங்களால், விவசாயத்தைக் கைவிட நினைக்கும் விவசாயிகளுக்கு இது ஒரு அற்புத வாய்ப்பாக இருக்கிறது. மரங்கள் நட்டு, வேளாண் காடுகள் அமைக்க விரும்புபவர்களுக்கு விலை மதிப்புள்ள தேக்கு, குமிழ், மகிழம், செஞ்சந்தனம், வேங்கை, கருமருது போன்ற தரமான மரக்கன்றுகள் மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இது, பசுமைப் பரப்பை அதிகரிக்கும் அதே நேரம், விவசாயிகளுக்கும் நீடித்த, நிலைத்த வருவாய் கிடைக்க வழி செய்கிறது.

ஈஷாவின் வேளாண் வல்லுனர்கள் மரம் வளர்ப்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் நுட்பங்களையும் நேரில் வந்து பரிந்துரை செய்வார்கள். உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

பசுமைக் கரங்கள் தொ. பே - 94425 90062