வெஜிடபிள் ஃபிங்கர் சிப்ஸ்

vegetable-finger-chips

ஈஷா ருசி

ஃபிங்கர் சிப்ஸ் என்றாலே உருளைக் கிழங்கில் பொரித்த சிப்ஸ் வகைதான் நம் நினைவிற்கு வரும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள வெஜிடபிள் ஃபிங்கர் சிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க…

வெஜிடபிள் ஃபிங்கர் சிப்ஸ்

தேவையான பொருட்கள்:

பச்சை பயிறு – 1 கப்
காய்கறி – 2 கப் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், கோஸ்)
குடைமிளகாய் – 1
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • பச்சை பயிரை இரண்டு மணிநேரம் ஊறவைத்து தண்ணீரை நன்கு வடித்துவிட்டு நைஸாக அரைத்து அதில் உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • காய்கறிகளை நறுக்கி வேக வைக்கவும்.
  • வெந்த காய்கறிகளுடன் பேக்கிங் சோடா, தயிர் சேர்த்து கிளறி அரைத்து வைத்துள்ள பச்சை பயிறு மாவில் கொட்டி கலக்கவும்.
  • இதை இட்லி தட்டில் ஊற்றி வேகவைக்கவும்.
  • பின் அதை எடுத்து நீள நீளமாக கட் செய்து எண்ணெயில் பொரித்தெடுத்து தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.



இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert