வாய்க்கு ருசியாக வாழைப் பழ உருண்டை!

வாய்க்கு ருசியாக வாழைப் பழ உருண்டை!, Vaikku rusiyaga vazhai pazha urundai

ஈஷா ருசி

வாய்க்கு ருசியாக வாழைப் பழ உருண்டை!

தேவையான பொருட்கள்:

பாதி கனிந்த வாழைப்பழம் – 2 (செவ்வாழை)
துருவிய தேங்காய் – ½ கப்
பனை வெல்லம் தூளாக்கியது – ½ கப்
ஏலக்காய் பொடி – ¼ டீஸ்பூன்
முந்திரி, திராட்சை, நெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாதி கனிந்த செவ்வாழைப்பழத்தை தோலுடன், புட்டு வேக வைப்பது போல ஆவியில் வேக வைக்கவும். பிறகு அதன் தோலை உரித்து அதிலுள்ள விதைகளை நீக்கி தண்ணீர் சேர்க்காமல் அதைப் பிசைந்து தனியே வைத்துக்கொள்ளவும்.

சிறிதளவு தண்ணீரில் பனை வெல்லத்தைச் சேர்த்து, சர்க்கரைப் பாகு எடுத்துக்கொள்ளவும். பிறகு அதில் துருவிய தேங்காயை கலந்துகொள்ளவும். அதனுடன் நெய், ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை கலந்து பூரணமாக செய்துக்கொள்ளவும்.

வேக வைத்த வாழைப்பழத்தை சிறு உருண்டையாக்கி, அதன் நடுவே இந்தப் பூரணத்தை வைத்து உருண்டையாக்கி தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான இனிப்பு வடை ரெடி! கொழுக்கட்டைக்கு செய்யும் இனிப்பு பூரணத்தையும் இதில் வைத்து சமைத்து பார்க்கலாம். கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுண்டி இழுக்கும் சுவையுடையது இந்த வடை உருண்டை.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert