உறவுகள் இறந்த பின்னும் உறவை தொடரமுடியுமா?

1000x600

நெருக்கமான உறவுகள் இறந்த பின்னர் அவர்களுடன் எப்படியாவது தொடர்புகொள்ள வேண்டுமென்ற ஆவல் பலருக்கும் இருப்பதை பார்க்கிறோம். இதைப் பற்றி சத்குருவின் பார்வை என்ன என்பதை தொடர்ந்து படித்தறியுங்கள்!

கேள்வி
நெருக்கமான உறவினர்கள் இறந்த பின்னும் அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ள முடியுமா?

சத்குரு:

உங்களுடன் மிக நெருக்கமாக இருந்த உறவினரை உதாரணமாக எடுத்துக் கொண்டு இதனை மிக உன்னிப்பாக கவனியுங்கள். அவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர்களுடைய உடலைப் பற்றி ஏதோ கொஞ்சம் தெரியும். அவர்களுடைய மனதையும் சற்று அறிந்திருக்கலாம், அவர்களது உணர்வுகளையும் நீங்கள் கொஞ்சம் புரிந்திருக்கலாம். இதைத் தவிர அவரைப் பற்றி வேறெதாவது தெரியுமா? ஒன்றுமே இல்லை, இல்லையா? அதனால் ஒரு மனிதருடன் நீங்கள் பழகக் கூடியது இத்தனை ஆழத்திற்குத்தான். அவருடன் உடலளவில், மனதளவில், உணர்வுரீதியில் மட்டுமே நீங்கள் அளவளாவ முடியும். ஒருவர் இறக்கும்போதோ அவர் இந்த மூன்று குணங்களையும் இழக்கிறார். அதனால் அவர் ஒருமுறை இறந்துவிட்டால் அவருக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கும் உங்களுடன் எந்த கணக்கு வழக்கும் இல்லை. அதனால் இறந்தவர்களை இறந்தவர்களிடமே விட்டுவிடுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert