சிலருக்கு வாழ்க்கைக்குள் சில நேரம் கனவு வருகிறது. இன்னும் சிலருக்கு கனவே வாழ்க்கையாகிறது. சில நேரங்களில் பேய், பிசாசு என்று பயமுறுத்துவதும், வேறு சில நேரங்களில் நாளை நடக்கப்போவதை படமாகக் காண்பிக்கும் கருவியாகவும் கனவுகள் பார்க்கப்படுகின்றன. உண்மையில் கனவு என்பது என்ன? அது சொல்லவருவது என்ன? விடை சொல்கிறார் சத்குரு.

கனவுகள் பற்றிக் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கனவு நம் ஆன்மாவின் வெளிப்பாடா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

கனவுகள் எங்கிருந்து ஆரம்பமாகிறது?

கனவுகள் உங்கள் மனதில் இருந்துதான் வருகின்றன. ஆன்மா வரைக்கும் அவை செல்வதில்லை. கனவுகளுக்கு இன்று அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், உளவியல்

Question: 90 சதவிகிதத்திற்கும் மேல், கனவுகள், நிறைவேறாத ஆசைகளின் வெளிப்பாடு தான்.

நிபுணர்களான ஃபிராய்டு மற்றும் ஜங், கனவுகளுக்கு மிக அதிமான முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள். ஆனால் நம் கீழை நாட்டு ஞானிகள், கனவுகளை மனதின் மற்றுமொரு பைத்தியக்காரத்தனம் என்று நிராகரித்தனர். நான் முன்பே சொன்னதுபோல உங்கள் மனம் என்பதே, சமுதாயக் குப்பைத்தொட்டி. அதனிடத்து இருப்பதெல்லாம், அது வெளியில் இருந்து சேகரித்தவை தான். சராசரி வாழ்க்கைக்கு மனம் ஒரு முக்கியமான கருவி, அவ்வளவுதான். உலகில் பிழைப்பதற்குத் தான் மனம் தேவைப்படுகிறது, ஆனால் வாழ்வைப் பொறுத்தவரை அதற்கு மதிப்பில்லை.

மக்களின் கனவு வாழ்க்கை!

பொதுவாக, பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வையே கனவுபோல் தான் வாழ்கிறார்கள். எப்படியெனில், நீங்கள் ஜாக் ஸ்டீவன்சனைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அவர் ஒருநாள் தன் கனவில் தவறு செய்துவிட்டதாக வருந்திக் கொண்டிருந்தார். மக்கள் கேட்டனர், "என்ன முட்டாள்தனம், கனவில் எப்படி தவறு செய்ய முடியும்?". அவர் சொன்னார், "இல்லை! இல்லை! நடந்தது என்னவெனில், நான் வாட்டிகன் (ரோமாபுரியில் உள்ள போப்பாண்டவரின் மாளிகை) சென்றிருந்தேன். அங்கே போப் தன் கையால் எனக்கு பானம் அளிக்க நினைத்து, "சூடாக வேண்டுமா? குளிர்பானம் வேண்டுமா?" என்று கேட்டார். நான் "சூடாக வேண்டும்" எனக் கூறினேன். அங்குதான் தவறு நிகழ்ந்தது. அவர் தண்ணீரை சூடு செய்வதற்காக உள்ளே சென்றார். நான் அதற்குள் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டேன். நான் குளிர்பானம் போதுமென்று சொல்லியிருந்தால் அதையாவது குடித்து மகிழ்ந்திருப்பேன்". நிறைய மக்களுக்கு வாழ்க்கை இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. தண்ணீர் சூடாவதற்கு முன்னால் வேறோரு பானம் அருந்த முடியும் என நினைத்து, இரண்டையுமே இழந்து விடுகிறார்கள்.

உணர்வின் பிரதிபலிப்பு

கனவுகள் நேரடியாக உங்கள் மனதிலிருந்து வருபவை. எனவே எந்தவிதமான கனவுகள் உங்களுக்கு ஏற்படுகின்றன என்பது முக்கியமில்லை. நீங்கள் கனவிலே கடவுளைப் பார்த்தாலும், பிசாசைப் பார்த்தாலும் அது முக்கியமில்லை. உங்கள் உணர்வில் இருப்பது எதுவோ, அதைத்தான் கனவுகள் பிரதிபலிக்கின்றன. 90 சதவிகிதத்திற்கும் மேல், கனவுகள், நிறைவேறாத ஆசைகளின் வெளிப்பாடு தான். மற்றவை வேறு நிலைகளில் ஏற்படலாம். அவை உள்ளுணர்வாகவும் இருக்கலாம்.

எதிர்பாராதவிதமாக, சில நேரங்களில், ஆழ்ந்த உறக்கத்தில், நீங்கள் உங்கள் ஆழ்மனதைத் தொட்டுவிடுவீர்கள். ஆழ்மனதைத் தொடுகிறபோது காலம், இடம் போன்ற எல்லைகளை நீங்கள் கடக்க முடியும். காலமும், இடமும் உங்களுடைய விழிப்புநிலை மனம் ஏற்படுத்தியவை. அவற்றைக் கடக்கிறபோது சில கனவுகள் ஏற்படலாம். உதாரணத்திற்கு, விடியற்காலை உங்களுக்கு வந்த கனவில், ஏதோ ஒரு தோட்டத்தில் நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள். உங்கள் நண்பர் வந்து ஏதோ சொல்கிறார். ஏதோ ஒரு சாதாரண சூழ்நிலை. மறுநாள் காலையில் அதே மாதிரி தோட்டத்தில் நீங்கள் உட்கார்ந்திருப்பீர்கள். அதே நண்பர் வந்து அதையே உங்களிடம் சொல்லுவார். இதுபோன்று நடந்திருக்கும். ஏதோ கனவு கண்டீர்கள். அது நடந்தது. இதற்குக் காரணம், எதிர்பாராதவிதமாக, காலம், இடம் போன்ற எல்லைகளைக் கடந்த உங்கள் ஆழ்மனதை நீங்கள் தொட்டுவிட்டீர்கள் என்பது தான்.

ஆனால் "நான் யார்" என்ற கேள்விக்கு விடையாய் இருக்கும் ஆழமான பரிமாணங்களுக்கும், கனவுகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. கனவுகள் மிக மேலோட்டமான நிலையில் இருக்கும் உங்கள் மனதில் இருந்து வருகின்றன. அதனால், அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்துங்கள். கனவிலே தொலைந்து போகாமல், வாழத் துவங்குங்கள்.