உலக அமைதி நாள்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், ‘அமைதி’ எனும் தலைப்பில் கவிதையொன்றை டென்னிஸியிலிருந்து எழுதியுள்ளார் சத்குரு. “இன்று உலக அமைதி நாள்” என்று ஃபேஸ்புக்கில் மட்டும் அப்டேட் செய்துவிட்டு, மனதில் அமைதியை தேடிக் கொண்டிருக்கும் பலருக்கு, தனது கவிதையில் விடை தருகிறார் சத்குரு!

 

அமைதி

அடுத்தடுத்த போர்களின் இடையே கிடைத்த இடைவெளியை
அமைதியென்று போற்றுகிறோம்!

அமைதி! ஆம்… இந்த அமைதியும் கூட
அடுத்த போருக்கான ஆயத்த காலமாகிறது!

கொள்கைகளுக்காகப் போர் புரிந்த நாம்,
இன்று எல்லைகளுக்காக போரிடுகிறோம்!

கடவுளின் பெயரைச் சொல்லி, எண்ணிலடங்கா
கொலைப் பாதகங்களை அரங்கேற்றியுள்ளோம்!

கோபம் வெறுப்பென்ற துர்நாற்றத்தால் நம்
அன்னை பூமியை நிறைக்கின்றோம்!

ஓ! தூக்கத்தில் ஆழ்ந்தவர்களே!
உங்களுள் வாழும் ரத்தம்குடிக்கும் அரக்கனை
கரைத்தகற்ற வாருங்கள்!

இங்கே! எனது உயிரின் நறுமணத்தைப் பருகி
வாழ்வின் பேரானந்தத்தை உணர்ந்திடுங்கள்!

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert