ஈஷா ருசி

"என்னது தாமரைப்பூவுல கூட்டா...?" என்ற கேள்வி இத்தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு வர முடியும். உணவில் பொரியல், கூட்டு போன்றவை இல்லாமல் நம் வீட்டுப் பெண்கள் சமையல் முழுமையடையாது. அப்படிப்பட்ட கூட்டு வகைகளில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இரு கூட்டு வகைகள் வித்யாசமானவைதான்... ச்சும்மா ட்ரை பண்ணி பாருங்க!

தாமரைப்பூ கூட்டு

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவையான அளவு

தாமரைப்பூ - 2 கப் (சிறியதாக நறுக்கியது)
பாசிபயிறு - 1/2 கப் (வேக வைத்தது)
சுக்கு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெப்பர் (மிளகுத்தூள்) (அ) மிளகாய் தூள் - தேவையான அளவு
புளி தண்ணீர் - 1/4 கப்

செய்முறை:

வாணலியில் நெய் ஊற்றி தாமரைப்பூவை நன்றாக வதக்கிய பின் சுக்கு, மஞ்சள் தூள், பெப்பர் (மிளகுதூள்) அல்லது மிளகாய் தூள் போடவும். நன்றாக கிளறிய பின் வேக வைத்த பாசி பயிரை போட்டு கிளறி சிறிது நேரம் கழித்து புளி தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் இறக்கி பரிமாறலாம். (கூட்டாகவோ அல்லது குழம்பாகவோ விருப்பப்படி வைத்துக் கொள்ளலாம்) சப்பாத்தி, இட்லி மற்றும் சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம்.

சௌசௌ வேர்க்கடலை கூட்டு

தேவையானவை:

பொடியாக நறுக்கிய சௌசௌ - ஒரு கப்
துவரம் பருப்பு - கால் கப்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
வேர்க்கடலை - கால் கப்
புளி - எலுமிச்சை பழ அளவு
மஞ்சள் - கால் ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை, கொத்துமல்லி சிறிதளவு

செய்முறை:

துவரம்பருப்பையும் வேர்க்கடலையையும் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து ஊற்றி, அதில் சௌசௌ துண்டுகளைப் போட்டு, உப்பு, மஞ்சள் சேர்த்து வேக விடவும். வெந்ததும் சாம்பார்பொடியை சேர்த்து, அது கொதித்ததும் அதில் வேகவைத்த வேர்க்கடலை, துவரம்பருப்பு இரண்டையும் சேர்த்து, நன்றாகக் கொதிவரும் பொழுது, இறக்கி விடவும். பிறகு, எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி தாளித்து கூட்டில் சேர்த்துப் பரிமாறவும்.