தமிழ்ப் புத்தாண்டில் நாம் என்ன செய்ய வேண்டும்?

tamil-puthandil-nam-enna-seyya-vendum

பிறக்கவிருக்கும் தமிழ்ப் புத்தாண்டில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை தனது ஆசிகளுடன் நமக்கு அறிவுறுத்தி வாழ்த்துகிறார் சத்குரு!

சத்குரு:

நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு ஏதாவது பயனுள்ள செயல்கள் செய்ய வேண்டும் என விரும்பினால் முதலில் நீங்கள் உங்களுக்குள் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். உங்களைச்சுற்றி என்ன நடந்தாலும், உங்களுக்குள் எப்படி அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருப்பது என்று தெரிந்து கொண்டால்தான், யாருக்கும் எதையும் செய்யக்கூடிய சிறந்த நிலையில் நீங்கள் இருப்பீர்கள். அப்படி நீங்கள் ஆனந்தமானவராகி விட்டால் உங்களைச் சுற்றியுள்ளவர்க்குத் தேவையானதைச் செய்வது என்பது உங்களுக்கு இயல்பாகவே வந்துவிடும்.

மனிதனின் அடிப்படை ஆசையே மகிழ்ச்சியும் ஆனந்தமும்தான் என்பதால் இந்த உலகிற்கு நீங்கள் அளிக்கக்கூடிய சிறந்த பரிசே நீங்கள் எப்போதும் ஆனந்தமான மனிதராக இருப்பதுதான். மற்றவர்க்கு நீங்கள் அளிக்கக்கூடிய புத்தாண்டுப் பரிசு அதுவாகவே இருக்கட்டும்.

உங்களுடன் நான் எப்போதும் இருக்கிறேன்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert