ஸ்பந்தா ஹாலில் உள்ள மணியின் முக்கியத்துவம் என்ன?

ஸ்பந்தா ஹாலில் உள்ள மணியின் முக்கியத்துவம் என்ன?, Spanda hallil ulla maniyin mukkiyathuvam enna?
கேள்வி
ஸ்பந்தா ஹாலில் உங்கள் இருக்கை அருகே மணி ஒன்று தொங்குகிறதே அதற்கு ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா?

சத்குரு:

இந்த மணி மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எப்போதும் இத்தகைய மணிகள் மிகவும் கவனத்துடன், சரியான உலோகம், சரியான வடிவம், சரியான கட்டமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. அதனால் இதற்கு தன்னை சுற்றியுள்ள சக்திநிலையை தக்க வைத்துக் கொள்ளக்கூடிய குணம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த மணி பல ஆன்மீகவாதிகளை விடவும், பல துறவிகளை விடவும் ஆன்மீகத்தை நன்றாக அறிந்துள்ளது. ஏனென்றால், இது அத்தகைய பல சூழ்நிலைகளுக்கிடையே இருந்துள்ளது. தன்னைப் பற்றிய விழிப்புணர்வு அதற்கு இல்லை. ஆனால் இந்த மணி தன்னைச் சுற்றியுள்ள பல அற்புதமான விஷயங்களை சேகரித்துள்ளது. அதற்கு பகுத்துப் பார்க்கும் அறிவோ அல்லது புத்திசாலித்தனமோ கிடையாது, இருந்தாலும் இது தன்னைச் சுற்றியுள்ளவற்றை சேகரிக்கும் திறமையுண்டு. உலோகங்களை நாம் இதுபோன்று உருவாக்க இயலும். பாதரசம் போன்ற உலோகங்களை மிக தீவிர உயிரோட்டமான நிலைகளுக்கு நாம் எடுத்துச் செல்ல முடியும். மனிதர்களை விடவும் இவற்றை உயிரோட்டமான நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert