சத்துமிக்க பயறு உருண்டை ரெசிபிகள்!

சத்துமிக்க பயறு உருண்டை ரெசிபிகள்!, Sathumikka payaru urundai recipegal

ஈஷா ருசி

பாட்டியின் கைப்பக்குவத்தில் செய்யப்படும் சத்து மாவு உருண்டையில் மணமும் சுவையும் மட்டுமல்லாமல் சத்தும் மிகுந்து இருக்கும். இங்கே அதே பாட்டியின் கைமணத்தில் நீங்கள் செய்து சாப்பிட இரண்டு ரெசிபிகள்!

பாசிப்பயறு உருண்டை

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 1 கப்
வெள்ளை சர்க்கரை – 1 கப் (நைஸாக அரைத்தது)
நெய் – சிறிதளவு
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை

செய்முறை:

ஒரு வாணலியில் பாசிப்பருப்பை போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பிறகு அதை ஆற வைத்து மிஷினில் போட்டு நைஸாக அரைக்கவும். அத்துடன் வெள்ளை சர்க்கரை பொடி, ஏலக்காய் பொடி போட்டு கலந்து கொள்ள வேண்டும். தேவையான அளவு சூடான நெய்யை ஊற்றி மிதமான சூட்டில் உருண்டை உருட்டினால் பாசிப்பயறு உருண்டை ரெடி. குழந்தைகள் விரும்பி உண்பர். சத்தான, சுவையான உணவு.

தட்டப்பயறு உருண்டை

சத்துமிக்க பயறு உருண்டை ரெசிபிகள்!, Sathumikka payaru urundai recipegal

தேவையான பொருட்கள்:

தட்டப்பயிறு (வேக வைத்தது) – 250 கிராம்
உலர்ந்த திராட்சை – சிறிதளவு
பாதாம் பருப்பு – 50 கிராம்
கருப்பட்டி பாகு அல்லது சர்க்கரை பாகு – தேவைக்கு ஏற்ப
நெய் – 1 ஸ்பூன்

செய்முறை:

தட்டப்பயிரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். உலர்ந்த திராட்சை, பாதாம் பருப்பை நெய்யில் வறுத்தெடுக்க வேண்டும். வேக வைத்த தட்டப்பயிறு, வறுத்த உலர்ந்த திராட்சை, பாதாம் பருப்பு, கருப்பட்டி பாகு, நெய் ஊற்றி பிசைந்து உருண்டையாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர். இதே போல் அனைத்து பயறு வகைகளிலும் இதை செய்யலாம்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press ConvertLeave a Reply