சரோத் இசையில் இரண்டாம் நாள் யக்ஷா திருவிழாவின் ஒரு கண்ணோட்டம் இங்கே...

'யக்ஷா' திருவிழாவின் இரண்டாம் நாள் இரவான இன்று, பண்டிட். தேஜேந்திர நாராயண மஜும்தார் அவர்களின் ஹிந்துஸ்தானி சரோத் இசை நிகழ்ச்சி அரங்கேறியது.

இன்றைய தலைமுறை சரோத் இசைக் கலைஞர்களில் பண்டிட். தேஜேந்திர நாராயண மஜும்தார் அவர்கள் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களில் ஒருவராக திகழ்கிறார். இசை நுணுக்கங்களும் புதுமைகளும் நிறைந்த அவரது இசையமைப்பும், மனம் கவரும் வகையில் அவர் இசைக்கும் மெல்லிசையும் நம்மை மெய்மறக்கச் செய்யும் தன்மை வாய்ந்தவை.

இன்றைய நிகழ்ச்சியில், பண்டிட்.தேஜேந்திர நாராயண மஜும்தார் அவர்களின் ஹிந்துஸ்தானி சரோத் இசை கேட்டுக்கொண்டிருந்த அனைவரின் காதுகளுக்கும் குழுமை சேர்ப்பதாய் அமைந்தது. தான் இசையமைத்த சாகித்யங்களை சத்குருவின் முன் அரங்கேற்றிய பண்டிட்.தேஜேந்திர அவர்கள், தொடர்ந்து பல நெஞ்சை அள்ளும் ராகங்களின் சரோத் இசையை வழங்கினார். சரோத் வழியாக இசை விருந்து படைத்த பண்டிட்.தேஜேந்திர அவர்களின் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

மூன்றாம் நாள் திருவிழாவான நாளை, திரு.டி.வி. சங்கர நாராயணன் அவர்களின் கர்நாடக வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியை http://mahashivarathri.org/yaksha-2015-live-webstream/ என்ற இணைய முகவரியில் (இலவசமாக) நேரடியாக கண்டுகளிக்கலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.