மனிதன் தான் கொண்டுள்ள சக்தியின் மகத்துவம் புரியாமல் அற்ப செயல்களுக்காக அதனை வீணடித்துக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, ஒருவர் தன் சக்தியை முழுமையாய் செலவழிப்பதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார் சத்குரு!

சத்குரு:

யாரோ ஒருவர் சொன்ன ஒரு சொல்லை, செய்த ஒரு செயலை நினைத்துக்கொண்டு உங்கள் சக்தியை வீணடிக்காதீர்கள். கண்களை மூடினால் - எண்ண ஓட்டத்தாலோ, தூக்கத்தாலோ உலகம் இல்லை எனும் நிலையிலேயே பெரும்பாலானவர்கள் இருக்கிறீர்கள். இப்படி இருக்கையில், உங்கள் சக்தியை முழுவதுமாய் செலவழிப்பது மிக முக்கியம். எந்த அளவிற்கு என்றால், உங்கள் நல்வாழ்விற்குக்கூட மிஞ்சாமல் உங்கள் சக்தியை நீங்கள் பயன்படுத்திட வேண்டும். Bore அடித்து, சோம்பேறித்தனத்தால், வருத்தத்தால், வேதனையால் மடிவதைவிட சோர்வினால் இறக்கலாம்.

வயதாகிறது என்பதற்காக, செய்யும் செயலைக் குறைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை! ஏதோ ஒரு செயலை மிகுந்த தீவிரத்துடனும், ஈடுபாட்டுடனும் செய்தால் அது உங்கள் செயல்திறனை மென்மேலும் அதிகரிக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.