சத்குருவின் கடைசி தந்தி

28 jul 13

“சார் தந்தி…” என்றதும், “அய்யய்யோ என்னாச்சோ!” என்று அலறிய காலம் போய், இ-மெயில், எஸ்.எம்.எஸ் என தொழில்நுட்பம் இன்று எங்கோ சென்றுவிட்டது. ஜூலை 14ம் தேதியன்று தந்தி சேவை நிறைவுக்கு வந்ததால், சத்குரு நமக்கெல்லாம் தனது கடைசி தந்தியை அனுப்ப; தந்தித் துறையினர் வழக்கம்போல் தங்களது பாரம்பரிய முறையைக் கடைபிடிக்க, தந்தி கடைசியில் காமெடியில் முடிந்தது. அந்த தந்தி உங்களுக்காக…

Sadhguru, Isha, Yoga, Last Telegram, meditation, Thanthi

இந்திய தந்தி சேவை ஜுலை 14ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது நமக்கு தெரியும். அதன் கடைசி தகவல் பரிமாற்றங்களில் ஒன்றாக, ஈஷாவின் தியான அன்பர்களுக்கு சத்குரு அனுப்பிய செய்தியும் இருந்தது. ஈஷாவின் அனைத்து மையங்களுக்கும் இந்த செய்தியை சத்குரு அனுப்பினார். மையங்களிலிருந்து அந்தச் செய்தி தியான அன்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தத் தந்தி இப்படி இருக்க வேண்டும்:

“அந்த தெய்வீகத்தின் ஆனந்தத்தை நீங்கள் உணர வேண்டும். இது என் கடைசி தந்தி. அன்பும் ஆசியும், சத்குரு.”

(“May you know the bliss of the Divine. My last telegram. Love and Blessings, Sadhguru.”)

ஆனால் கம்பி சேவை சிலவற்றை மாற்றி, கடைசி வரியில் இருந்த “அன்பும்” என்ற வார்த்தை விட்டுவிட்டதால்,

“இது என் கடைசி தந்தியும் ஆசியும்” என்றாகிவிட்டது. (“My last telegram and blessings.”)

இந்த தவறை சத்குருவிற்கு தெரிவித்தபோது, அவர் அளித்த நகைச்சுவையான பதில் தந்தி:

“இது என் கடைசி தந்திதான், ஆனால் என் ஆசிகள் எப்போதும் உங்களுக்கு நிலைத்திருக்கும். அதேபோல் இதுதான் இந்திய தந்தி அலுவலகம் செய்யக்கூடிய கடைசி தவறாகவும் இருக்கும், அவர்களை மன்னித்துவிடுங்கள்.”

அன்பும் அருளும்,
சத்குரு
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert