ருசியோ ருசி…!

ருசியோ ருசி…!, Rusiyo rusii

ஈஷா ருசி

இந்திய அணி சிக்ஸர் அடித்து வாகை சூடியிருக்கும் இந்நேரத்தில் ஈஷாவிற்கும் இந்திய கிரிகெட் வீரர்களுக்கும் மலர்ந்துள்ள அற்புத பந்தத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம்…

மாம்பழ மோர்க் குழம்பு

தேவையான பொருட்கள்

புளித்த தயிர் – ஒரு கப்
மாம்பழம் – 3
மஞ்சள் தூள் – அரை டீ ஸ்பூன்
சர்க்கரை – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

அரைக்க:

துருவிய தேங்காய் ஒரு கப், வெந்தயம் அரை டீ ஸ்பூன், வரமிளகாய் 5

தாளிக்க:

கடுகு அரை டீ ஸ்பூன், வெந்தயம் அரை டீ ஸ்பூன், கருவேப்பிலை ஒரு ஈர்க்கு

செய்முறை:

மாம்பழத்தைத் தோல் நீக்கி, மஞ்சள் தூள் சேர்த்து, சுடுதண்ணீரில் வேகவைத்து, வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் அரை டீ ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன், வெந்தயம், வரமிளகாய் இரண்டையும் வறுக்கவும். இத்துடன் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து, அதில் வேகவைத்த மாம்பழத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும், இத்துடன் புளித்த தயிர் சேர்த்து, அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன், தேவையான அளவு உப்பு, 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து இறக்கவும். ஒரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து அதில் சேர்த்தால், சுவையான மாம்பழ மோர்க் குழம்பு ரெடி!

பீட்ரூட் ஜவ்வரிசி உப்புமா

.
ருசியோ ருசி…!, Rusiyo rusii

தேவையான பொருட்கள்:

துருவிய பீட்ரூட் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய பீன்ஸ் – ஒரு கப்
வேகவைத்த வேர்க்கடலை – ஒரு கப்
வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு – ஒரு கப்
ஜவ்வரிசி – 2 கப்
தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
கருவேப்பிலை – 1 ஈர்க்கு
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

ஜவ்வரிசியை 1 மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து பின்னர் இத்துடன் பீன்ஸ், துருவிய பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியவுடன் வேகவைத்த வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, மிளகாய்தூள், உப்பு சேர்த்து கிளறவும். இத்துடன் ஊறவைத்த ஜவ்வரிசி சேர்த்து ஒன்றாக கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேகவைத்து, தேங்காய் பூ தூவி பரிமாறவும்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert