பூனை குறுக்க போனா…

cat and belief

ஐயோ பாவம் இப்படி அடிப்பட்டுக் கிடக்கானே எந்த பூனை குறுக்கால போச்சோ என்று நொந்து கொள்ளும் நகர மாந்தர்களுக்கு எல்லாம், பூனை குறுக்கே போகும் விஞ்ஞானத்தைப் பற்றி ஒரு விரிவான விளக்கம்… நல்ல பூனையாய் பார்த்து பயணத்தைத் தொடங்குங்கள்!


சத்குரு:

நீங்கள் காட்டுப் பாதையில் நடந்திருந்தால், இதை அறிந்திருப்பீர்கள். பொதுவாக பூனை ஒரு திறந்த வெளியைக் கடந்தால், உடனே மறைவில் சற்று நேரம் பதுங்கியிருக்கும். ஏதாவது நடமாட்டம் இருக்கிறதா என்று ஒளிந்திருந்து கூர்மையாக கவனிக்கும். அது அதனுடைய இயற்கையான குணம்.

புலி, சிறுத்தை போன்றவை பூனை இனத்தைச் சேர்ந்தவை.

இன்றைக்குக்கூட உங்கள் வாகனம் போகும் பாதையில் ஒரு புலி கடந்தால, அது ஓடிப் போய்விடாது. புதரில் மறைந்து உட்கார்ந்திருக்கும்.
இன்றைக்குக்கூட உங்கள் வாகனம் போகும் பாதையில் ஒரு புலி கடந்தால, அது ஓடிப் போய்விடாது. புதரில் மறைந்து உட்கார்ந்திருக்கும். அதன் இரை வருகிறதா அல்லது அதன் பாதுகாப்புக்கு இடையூறாக யாராவது வருகிறார்களா என்று பார்த்திருக்கும்.

நகரங்கள் உருவாகாத பழைய தினங்களில், காட்டுப் பதையில் மக்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் மாட்டு வண்டிகளின் மூலமாகவும், நடந்தும் தங்கள் பயணத்தை அவர்கள் மேற்கொண்டார்கள்.

‘புலி போன்ற பூனை இன மிருகம் குறுக்கில் கடந்தால், அது புதரில் பதுங்கியிருக்கலாம். உங்களையோ, உங்கள் வாகனத்தை இழுக்கும் மிருகங்களையோ குறி வைத்து அது பாயக்கூடும். சற்று நேரம் பொறுத்துப் பயணத்தைத் தொடர்வது நல்லது’ என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

இன்றைய தினத்தில் இது அபத்தமான நம்பிக்கை.

மோட்டார் வாகனங்கள் விரையும் நகர வீதிகளில், பூனை குறுக்கே போனால், அதற்குத்தான் சகுனம் சரியில்லை; ஏதாவது வண்டியில் அடிபட்டு செத்து விடும்.

Photo Courtesy:Mulletar @ flickrஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert