Question: நம் பேராசையை வெல்வதற்கு எது சிறந்தவழி?

சத்குரு:

நீங்கள் பேராசையை வெல்லக்கூடாது. அதை இன்னும் அதிகரித்துக் கொள்ளவேண்டும். நீங்கள் பேராசையை வெல்லவேண்டாம் என்று நான் சொல்லக் காரணம், அதை வெல்வது நடக்காத காரியம். ‘நான் பேராசையை அடக்கிவிட்டேன்’ என்பதெல்லாம் வெறும் நடிப்பு. பேராசை என்றால் என்ன? இருப்பவை எல்லாம் உங்களுக்கே வேண்டும். ‘உங்களுக்கே’ என்பது என்ன? நீங்கள், உங்கள் குடும்பம்... சிலநேரங்களில் உங்கள் சமூகம். நான் சொல்வதெல்லாம், உங்கள் பேராசையில் எல்லோரையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்!

எதற்காக பேராசையைத் துறக்க நினைக்கிறீர்கள்? எல்லோரையும் சேர்த்துக் கொண்டால், பேராசையும் நல்லது தான்.

எதற்காக பேராசையைத் துறக்க நினைக்கிறீர்கள்? எல்லோரையும் சேர்த்துக் கொண்டால், பேராசையும் நல்லது தான். எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவது, இந்த முழு பிரபஞ்சத்திற்குமே ஆசைப்படுவது பேராசையின் உச்சம் தான், இல்லையா? இதுதான் ஆன்மீகம். அதனால் இப்போது உங்களுக்கிருக்கும் பேராசை போதாது. தயவுசெய்து உங்கள் பேராசையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பேராசையை சுருக்க நினைக்காதீர்கள். அதை எவ்வளவு முடியுமோ, எந்த அளவிற்கு அது விரிவடையுமோ, அந்த அளவிற்கு அதை விரியச் செய்யுங்கள்... அப்போது நீங்கள் அற்புதமாக வாழ்வீர்கள். நான் மிகுந்த பேராசைக்காரன். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் நான் அறிந்திருப்பது போல் வாழ்வை அறிந்து அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரே ஒருவர் கூட இந்த சாத்தியத்தை உணராமல் இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். எப்படியாவது இது அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். ஏனெனில் நான் மிகமிக அதிகமாக பேராசை கொண்டவன். ஒரு பத்து பேரையோ, பத்தாயிரம் பேரையோ இல்லை பத்து லட்சம் பேரையோ இது எட்டினாலும் போதாது. இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரையும் இது சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.