பாத யந்திரம் - இது அருளைப் பெற்றுக் கொள்வதற்காக சத்குருவால் உருவாக்கப்பட்டுள்ள மற்றுமொரு வழி. பல ஆயிரம் பேர் தங்கள் இல்லங்களில் மௌனமாய் பிரதிஷ்டை செய்து கொண்டிருக்கும் இந்த பாத யந்திரம், அவர்களது இல்லங்களுக்கு என்ன செய்யும்? எதற்காக ஒருவர் இதனை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும். விடை சொல்கிறது இந்தக் கட்டுரை...

மணிக்கணக்கில் நெருக்கமாக தொடுத்த பூமாலை யாருக்கு என்ற வியப்பு பூக்காரரின் கண்களில்! 'சாமிக்கா... இல்லை!', 'யாரோ வி.ஐ.பி-க்கா? இல்லை'! பின்னே யாருக்கு? 'சத்குருவின் பாத யந்திரத்திற்கு' எனக் கூறிய அன்பரின் முகத்தில் அத்தனை ஆனந்தமும் பெருமிதமும்!

சத்குரு பாதமா? அது என்ன?

ஆம்! பல ஈஷா தியான அன்பர்களின் இல்லங்களில் பெரும் அருள்மழை பெய்துக் கொண்டிருக்கிறது, சத்குரு பாதம்!

சத்குரு பாதம் (அ) சத்குரு சந்நிதி

1

ஒவ்வொரு உயிரின் ஆன்மீக வளர்ச்சிக்காகவும், உள்நோக்கிய பயணத்தில் கரைந்து போவதற்கும், சத்குரு வழங்கும் ஓர் அற்புதக்கருவி, சத்குரு பாதம்!

ஒவ்வொரு சத்குரு பாத யந்திரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டு பின்பு, தியான அன்பர்கள், அவர்களின் இல்லத்திற்கு எடுத்து செல்கின்றனர். பிறகு, இதற்கென பயிற்சிப் பெற்ற ஆசிரியர்களாலும், தன்னார்வத் தொண்டர்களாலும், சத்குரு பாதம் கொண்ட இல்லம் சந்நிதியாய் மாறுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எளிமையாக சொல்லவேண்டுமென்றால், இருண்ட வீட்டுக்குள் பேரொளியைக் கொண்டு செல்வதுபோல! அருள் நிறைந்த இல்லம் எப்படி இருக்கும்? பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் வாழ்வதென்றால் என்ன?

சற்று திறந்த மனதோடு எவரேனும் சத்குரு சந்நிதியில் அமர்ந்தால் அவர்கள் சக்திவாய்ந்த அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளமுடியும். அவர்களுக்குள் ஒருவிதமான மென்மையை உணரலாம். காரணம் ஏதுமின்றி ஆனந்தமாக இருக்கமுடியும்.

ஆண்டு முழுவதும் சத்குரு சந்நிதி பல இல்லங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வந்தாலும், மஹாசிவராத்திரியன்று நூற்றுக்கணக்கான தியான அன்பர்களுக்கும், தொண்டர்களுக்கும் பாதம் வழங்குதல் பெரிய விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.
2

பாதம் கொண்டு சென்ற அன்பர்கள் தமக்குள்ளும் தம் குடும்பத்தினரிடமும் பல மாற்றங்களைக் கண்டனர். காரண அறிவாலும் புரிந்து கொள்ளமுடியாமல், ஒரு உயிரோட்டமுள்ள சக்திநிலையின் தாக்கத்தை கிரகித்துக் கொள்ளமுடியாமல், பலர் திக்குமுக்காடிப் போயினர்!

அப்படி ஒரு சில நபர்களிடம் சத்குரு சந்நிதி பற்றியும், அதன் அனுபவம் பற்றியும் கேட்டோம். இதோ அவர்களிடமிருந்து உதிர்ந்த சொற்கள்...

திரு. ராஜசேகர்

சத்குரு பாதம் பற்றி ஈஷா சர்க்கிளில் பலர் பேசக் கேட்டேன். "நான் ஏன் இன்னும் பாதம் எடுத்து செல்லவில்லை?" என்ற கேள்வி வர ஆரம்பித்துவிட்டது என்னுள்! எனக்கும் ஆர்வம்தான்... ஆனால்... தனி இடத்திற்கு எங்கேபோவது, வீட்டில் உள்ளோர் எப்படி ஏற்றுக்கொள்வார்கள், இப்படி பல தடைகளை நானே போட்டுக்கொண்டேன். அப்பொழுது ஒரு ஈஷா நண்பர், 'உங்கள் வீடு சிறியது என்பதற்காக சத்குருவை உங்கள் வீட்டுக்குள் அழைக்கமாட்டீர்களா?' எனக் கேட்க, என் முட்டாள்தனத்தை மூட்டைக் கட்டிவிட்டு, பாதம் கொண்டுவர பதிவு செய்தேன்.

மிக எளிய முறையில் சந்நிதி பிரதிஷ்டை என் இல்லத்தில் நடந்தது. எப்போதும் பூஜை புனஸ்காரம் என்று இருக்கும் என் அம்மா, சந்நிதி பூஜையையும் ஆர்வத்தோடு தவறாமல் செய்து வந்தார்.

ஞாயிறுதோறும், அம்மா, அப்பா, மனைவி அனைவரும் சேர்ந்து சந்நிதி பூஜை செய்வோம்.

என் பெற்றோரிடம் அமைதி, ஆனந்தம் நிலவுவதை உணர்ந்தேன். அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை அதிகரித்ததைக் கண்டேன். பிரச்சனைகளைத் தள்ளி வைத்து பார்க்க முடிந்தது அவர்களால். என் அம்மாவின் உடல்நலம் சீரடைந்தது... மருந்து மாத்திரை குறைத்து, தினமும் யோகா செய்து வருகிறார்கள் இருவரும்.

சந்நிதி முன் பயிற்சி சுலபமாக, விருப்பமாக நடக்கிறது, என்னுள். சந்நிதியின் சக்திவாய்ந்த அதிர்வுகளை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. ஒரு சில சமயங்களில் வெடித்துபோகும் அளவிற்கு ஆனந்தத்தை எட்டினேன். திடீரென கண்களில் நீர் ததும்பி வழியும்!

என் குழந்தையிடமும் பல மாற்றங்களைக் கண்டு வியந்து போனேன். அவளது கேள்விகளும், பிறரிடம் காட்டும் பெருந்தன்மையையும் பார்த்து அவளா இது, இல்லை சத்குருவே இவள் மூலம் பேசுகிறாரா எனத் தோன்றும். அவள் தனித்தன்மையாய் இருப்பதையும், அவளிடம் ஓர் சுதந்திரத்தையும் பார்க்க முடிந்தது.

"சத்குரு சந்நிதி - அருளின் பேரொளி" - அருள் வெளியில் வாழ்க்கை மிகக் கொண்டாட்டமாய் நடக்கிறது... இன்னும் அவர் பாதம் என்னவெல்லாம் நிகழ்த்தும்?! அதை ருசிப்பதற்கு வாழ்வின் ஒவ்வொரு நாளையும் எதிர் நோக்குகிறேன் ஆனந்தமாக...

திருமதி. சுமித்ரா குமரன்

சத்குருவை இல்லத்திலும் உள்ளத்திலும் வைத்திருக்கும் திருமதி. சுமித்ரா குமரன் அவர்களிடம், தம் அனுபவத்தைக் கேட்டோம். மிக ஆர்வமாக எழுதச்சென்று, பிறகு வார்த்தை ஏதும் வராமல், காகிதத்தில் எழுதித் தந்த கவிதை உங்களுக்காக...
3

சத்குரு சந்நிதி பற்றி மேலும் தகவல்களுக்கு:

தொ.பே: 9489000333
மின்னஞ்சல்: info@dhyanalinga.org