நான் அமெரிக்காவில் கால் பதித்து 76 மணி நேரங்கள் தான் ஆகின்றன. அதற்குள் ஹுஸ்டன், டெக்சாஸ், ப்ரூன்ஸ்விக், நியூ ஜெர்ஸி மாகாணங்களில் உள்ள நகரங்களுக்கு சென்றாகி விட்டது. தற்போது நான் மெம்பிஸில் உள்ளேன். ஒரு காலத்தில் மிஸிசிப்பிக்கு ஆபரணமாய் விளங்கி, மர வியாபாரத்திற்கும், கால்நடை வியாபாரத்திற்கும் ஏன் மனித வணிகத்திற்கும் கூட ஒரு முக்கிய இடமாய் விளங்கியது மெம்பிஸ் நகரம்.

இந்நகரத்திற்கு பெருமைகளும் உண்டு, குருதியை உரைத்த கதைகளும் இங்குண்டு. பிரபல கலைஞர் எல்விஸ் தி பெல்விஸின் பிறப்பால் சிறப்பு பெற்ற ஓர் இடம். இவை அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவையும் இந்த உலகையும் தன் பேராற்றல் வாய்ந்த அலையால் துடைத்துச் சென்ற மாறாப் புகழ் கொண்ட இடம்.

இன்று கூட எல்விஸை போல் தோற்றம் பூண்டு, அவரைப் போலவே சுழன்று சுழன்று நடனம் செய்து பிழைப்பு நடத்திக் கொள்ளும் பலரை இங்கு காண முடிகிறது. கபூர் வம்சத்தைச் சேர்ந்த ஷேமியையும் நம்மால் மறக்க இயலாது. பீட்டில்ஸ் இசைக்குழு தோன்றும் முன்னே அமெரிக்க இளைஞர்களை தன் தீவிரத்தால் கனலில் இட்டவர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பின்னாளில், கங்ஞனம் ஸ்டைலும் ஹார்லேம் ஷேகர்சும் செய்ததை அவர்களுக்கு முன்னரே செய்து அவர்களைப் பின்னுக்குத் தள்ளியவர். அமெரிக்காவின் தென் பகுதிக்கு அடையாளமாய் இருப்பவர் எனச் சொல்லலாம்.

அற்புத மனிதர், எழுச்சி மிக்கவர், தீரமும் கனவுகளும் கொண்டவர், அமெரிக்க உள்புரட்சியின் தேவதூதன் என வர்ணிக்கப்படும் மார்டின் லூதர் கிங்கை ஒரு தோட்டாவால் சுட்டு அது அவர் தாடையைத் துளைத்து, தொண்டையை கீறி தோள்பட்டை வழியே வெளியேறி அந்த பெருந் தலைவரின் உயிரை கோழைத்தனமாக பதம் பார்த்த புகழ்ச்சிக்கு உரிய நகரம் இது.

ஒரு படுகொலைச் செயல் ஒருவரின் உயிரைப் பறிக்கலாம், ஆனால் அவர் விட்டுச் சென்ற அந்த ஜுவாலையையும், ஏற்றத்தாழ்வுகளைத் துடைத்தழித்து, சம உரிமையை நிலைநிறுத்தியமையும் யாராலும் அழிக்க முடியாது. அவர் இந்த மாபெரும் தேசத்தை பாகுபாடு என்னும் அவமானத்திலிருந்து மீட்டெடுத்தார்.

மார்டின் லூதர் கிங்கின் பங்களிப்பில்லாமல் உலக தேசங்களின் கூட்டணியில் தன் நெஞ்சத்தை நிமிர்த்தி அமெரிக்காவால் நின்றிருக்க முடியாது. எதற்காக அவரைச் சுட்டு வீழ்தினார்கள் என்ற கேள்வியுடன் இன்று நான் மெம்பிஸ் நகரத்தில்...
ஒரு மஹாத்மா, ஒரு மார்டின், ஒரு லிங்கன் இவர்கள் அனைவரும் தோட்டாக்களை சந்தித்தனர். "ஓ! மாமனிதர்களே நீங்கள் எங்களுக்கு தேவையில்லை," என இது நாம் அறிவிக்கும் பிரகடனமா அல்லது உங்களுடன் இருக்க எங்களுக்கு தகுதியில்லை என்று நாம் சொல்பவையா இந்த பலிகள்?

அவர்களின் மரணம் வீணாய்ப் போய்விடவில்லை. 1968ல், அவர் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்நாளில், ஒரு கருப்பு மனிதர் அமெரிக்காவின் அதிபதி ஆவார் என்று யாரும் கற்பனை செய்திருப்பார்களா என்ன? இதுதான் வாழ்க்கையின் சக்தி.

எல்லோருக்கும் கனவிருக்கிறது, ஆனால் எத்தனைப் பேருக்கு தன் வாழ்வைப் பணயம் வைத்து தன் கனவை நிஜமாக்கும் துணிவிருக்கிறது? நாளை ஏற்படப் போகும் அவர்களின் கனவுகளுக்காக இன்று தங்கள் சுகங்களைக் தூக்கி எறியும் துணிவும், உறுதியும் எத்தனை பேருக்கு இருக்கிறது?

வாழும் தலைமுறைக்கும், அதன் பின் வரும் சந்ததிக்கும் எது நல்லது என்பதைக் காணும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்புரிவதுதான் மாமனிதர்களை நம்மிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது.