நெல்லி & கேரட், பீட்ரூட் ஜூஸ் ரெசிபிகள்!

நெல்லி & கேரட், பீட்ரூட் ஜூஸ் ரெசிபிகள்!, Nelli carrot beetroot juice recipes

ஈஷா ருசி

ஆரோக்கியம் தரும் இரண்டு சத்துமிக்க ஜீஸ் (நெல்லி & கேரட், பீட்ரூட் ஜூஸ்) ரெசிபிகள் இங்கே!

நெல்லிக்கனி ஜுஸ்

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் – 10
எலுமிச்சை பழம் – 1/2
தேன் – சிறிதளவு

செய்முறை:

  • நெல்லிக்காயை கொட்டை நீக்கி, நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு 1 டம்ளர் தண்ணீர் கலந்து மிக்ஸியில் அடித்து வடிகட்டியில் வடிகட்டி பிறகு இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிடலாம்.
  • மாதம் ஒருமுறை சாப்பிட்டால் நல்ல உடல்வாகு அமைவதுடன் இடுப்பு வலி, தும்மல், சளி, பித்தம் யாவும் நீங்கும். இரத்தம் விருத்தியாகும். உடல் எலும்புகளுக்கு கால்சியம் சத்து கிடைக்கும்.

கேரட், பீட்ரூட் ஜீஸ்

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் – 1
கேரட் – 5
தேன் – ருசிக்கேற்ப

செய்முறை:

  • கேரட், பீட்ரூட் இரண்டையும் தோல் சீவி சிறியதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி தேன் ஊற்றி பருகலாம்.
  • தேனுக்கு பதிலாக சுவைக்கேற்ப மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாப்பிடலாம்இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert