‘நாளை’ என்ற பொய்யை புறந்தள்ளி, தமிழ் புத்தாண்டை வரவேற்போம்!

‘நாளை’ என்ற பொய்யை புறந்தள்ளி, தமிழ் புத்தாண்டை வரவேற்போம்! , Nalai endra poiyai puranthalli tamil puthandai varaverpom!
  • ‘நாளை’ – அந்த நாள் எப்போதும் வரப் போவதில்லை…
  • நாம் விளையாடும் எந்தவொரு விளையாட்டை நிகழவும் அனுமதிப்பதில்லை.
  • ஒரு நாள் அது அத்தனை பழிகளுக்கும் காரணம் ஆகும். பயத்திற்கும் அவமானத்திற்கும் காரணமாய் தொக்கி நிற்கும்.
  • வாழ்க்கைச் சுடரை ஒளிரவிடாது சுருக்கி வைக்கும்.
  • அந்த ‘அழுகுணி’ வாழ்வை வெறும் கனவாய் மாற்றி வைக்கும்.
  • வரையறை அற்றதை ஒரு வரையறைக்குள் சிறை பிடிக்கும்.
  • என்றுமே வராத அந்நாள் உலகை முழுதாய் ஆண்டு நிற்கும்.
  • யாருக்கும் ‘நாளை’ என்பது வரப்போவதில்லை, ஆனால் ‘நாளை’ என்கிற அந்த எண்ணம் பெரும்பான்மையான மனிதர்களது வாழ்வை கொள்ளை அடித்துவிட்டது. யாரும் எப்பொழுதும் தம் வாழ்வில் அந்த ‘நாளை’ தொட்டது இல்லை, அனுபவித்தது இல்லை, பார்த்தது இல்லை. ‘நாளை’ என்கிற அந்த எண்ணம் ஒருவருக்கு எதெல்லாம் வாழ்க்கையாக இருக்க வாய்ப்பாக இருக்குமோ அதை எல்லாவற்றையும் திருடிவிடுகிறது.

இதோ நம்மிடம் இருக்கிறதே இந்தக் கணம், இதில் வாழ்வை முழுமையாய் வாழ்வோம்.

அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert