நான் மறந்த பாடல்…!

அலை… அலை

சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் “அலை” இசைத் தொகுப்பின் பாடல்களை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளும் வசதியை, இதன் மூலம் வழங்குகி வருகிறோம். இசைத் தொகுப்பிலிருந்து இறுதி அலையாக… “நான் மறந்த பாடலை, நீ பாடிக்காட்டினாய்”

“அலை” எனும் இசைச் சரத்தில் மணக்கும் இன்னொரு மலராக மகரந்தம் பரப்புகிறது, இந்தப் பாடல்.

“பாடிக் காட்டினாய், யாழினைத் தேடி மீட்டினாய், சாயல் காட்டினாய்…” இப்படி ஒவ்வொரு வரியின் இறுதி வார்த்தைகள் ஒன்றி வருவதால், இயைபுத் தொடையாக அமைகிறது.
“வானவில்லும் நாண வாழ்வில் வண்ணம் தீட்டினாய்!” என்ற வரியில்தான் என்ன ஒரு கற்பனை நயம்!

மீதிப் பாடல் வரிகள் இங்கே…

நான் மறந்த பாடலை நீ பாடி காட்டினாய்
நாண் இழந்த யாழினை நீ தேடி மீட்டினாய்
காணுகின்ற யாவிலும் உன் சாயல் காட்டினாய்
வானவில்லும் நாண வாழ்வில் வண்ணம் தீட்டினாய்

ஓங்கி நின்ற மூங்கிலில் நீ காற்று வீசினாய்
உள்ளெழுந்த ஓசையை நீ கீதம் ஆக்கினாய்
கானல் நீரில் இன்பம் கண்ட காலம் மாற்றினாய்
பாலையாய் இருந்த மண்ணை சோலை ஆக்கினாய்

நடக்கும் நாடகம் முடியுமா
போட்ட வேடம் கலையுமா
அடுத்த பாத்திரம் ஏற்காமல்
அருள் மழை எனக்குதவுமா
நாடினேன் உன்னையே பாதையை நீ காட்டுவாய்

Sounds of Isha வின் பிற பாடல்களை டவுன்லோடு செய்ய: http://soundsofisha.org/
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert