மஞ்சள், கருப்பு – மகத்துவம் என்ன?

manjal-karuppu-magathuvam-enna

வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்? பகுதி 3

கருப்பு நிறம் பற்றி பல்வேறு கருத்துக்களும், கற்பனைக் கதைகளும் உலவி வருகின்றன. உண்மையில் கருப்பு நிறம் என்ன செய்யும், கருப்பு உடை அணிந்தால் என்னாகும்? மஞ்சள் மற்றும் கருப்பு நிறம் பற்றி சத்குருவின் விளக்கம் இதில்…

சத்குரு:

மஞ்சளின் மகிமை

புத்த மதத்தினர்களில், அர்ஹட் (arhat) என்ற நிலை அடைந்த துறவிகள் காவி உடை பூண்டனர். மற்றவர்கள் மஞ்சள் உடை தரித்தார்கள், ஏனென்றால் ஆன்மீகப் பாதையில் புதிதாக தொடங்கி இருப்பவர்களுக்கு கௌதமர் எளிய பயிற்சிகளையே சொல்லிக் கொடுத்தார். ஏனென்றால் அதற்கு தயாராக தேவை இல்லை. ஒரு விழிப்புணர்வு அலை உருவாக்கவே இந்தப் பயிற்சி. அவர் ஒரே இடத்தில் வெகு நாட்கள் இல்லாமல், கிராமம் கிராமமாக சென்று போதனை செய்ததால், ஒரே இடத்தில் இருந்து கடின பயிற்சிகளை சொல்லிக்கொடுக்க நேரம் இல்லாததால், எளிய முறைகள் சொல்லிக்கொடுத்து, அவர்களை துறவறத்தில் ஈடுபடுத்தினார். ஆதலால் அவர்களை மஞ்சள் நிற ஆடை அணியச் சொன்னார். மூலாதார சக்கரத்தின் நிறம் மஞ்சள். மூலாதாரம்தான் உடலின் அடிப்படையான சக்கரம். அவர்களை ஒரு நிலைப்படுத்த நினைத்தார்.

ஒருவர் மிக அதிர்வுள்ள, நேர்மறையான ஒரு இடத்திற்கு கருப்பு நிற ஆடை அணிந்து சென்றால், அதிக சக்தியை கிரகித்துக் கொள்ள முடியும்.
ஒருவரை ஆன்மீகப் பாதையில் பல பிறவிகளில் பயணிக்க வைக்க வேண்டுமானால் எளிய பயிற்சி முறை தேவை. இம்முறை இன்றும் புத்த மதத்தில் இருக்கிறது. அவர்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருப்பார்கள், ஏனென்றால் இது நிலைபடுத்துவதை குறிக்கோளாக கொண்டது அவர்கள் மெய்ஞானம் பெறுவது குறிக்கோள் அல்ல. ஆதலால் அவர்களை மஞ்சள் உடை அணிய சொன்னார்.

கருப்பு நிறத்தின் அறிகுறி:

நீங்கள் எதோ ஒரு நல்ல சக்தி வாய்ந்த இடத்திற்கு சென்று, அந்த சக்தி நிலையை உள்வாங்க வேண்டுமானால், கருப்பு நிறம் அணிவது நல்லது. கருப்பு நிறத்திற்கு எதையும் வெளியே தள்ளாமல் கிரகித்துக் கொள்ளும் தன்மை உண்டு. கருப்பு நிற ஆடை அணிந்து சக்தி வாய்ந்த இடத்திற்கு சென்றால், உங்களால் அந்த சக்தியை உள்வாங்க முடியும். அதே மாதிரி கருப்பு ஆடை உடுத்தி ஒரு எதிர்மறை சக்தி உள்ள இடத்திற்கு செல்ல நேரிட்டால், அதையும் உள்வாங்கக் கூடும்.

நிறைய பேர் கருப்பு நிற ஆடை உடுத்த தகுதி அற்றவர்கள். நீங்கள் எப்பொழுதும் கருப்பு உடை அணிந்து, பல தரப்பட்ட சூழ்நிலைகளுக்கு உங்களை உட்படுத்தினால், உங்கள் சக்தி நிலையாக இல்லாமல் இருப்பதை கவனிக்க முடியும். உங்கள் உணர்வுகளை உறிஞ்சி, மனதை சமநிலை இல்லாது செய்து விடும். உங்களை துயரத்தில் ஆழ்த்தி விடும். அதை வெளிப்படுத்தக் கூட முடியாத ஒரு துயர நிலையில் இருப்பீர்கள்.

அதே ஒருவர் மிக அதிர்வுள்ள, நேர்மறையான ஒரு இடத்திற்கு கருப்பு நிற ஆடை அணிந்து சென்றால், அதிக சக்தியை கிரகித்துக் கொள்ள முடியும். ஒரு இடத்தின் தன்மையை பொறுத்தே கருப்பு ஆடை உடுத்த வேண்டும்.

வைராக்கியம்:

நீங்கள் வைராக்கியம் என்ற வார்த்தையை கேட்டு இருப்பீர்கள். ராகா என்றால் நிறம். வை என்றால் ‘கடந்து’. வைராக் என்றால் நிறங்களைத் கடந்து, அதாவது ஒளி ஊடுருவக் கூடிய ஒருவராக இருப்பவர். அதாவது, உங்களுக்குப் பின்னால் சிகப்பு நிறம் இருந்தால் நீங்கள் சிவப்பாக தெரிவீர்கள், உங்களுக்கு பின்னால் நீல நிறம் இருந்தால் நீங்கள் நீலமாக மாறுவீர்கள். மஞ்சளாக இருந்தால் மஞ்சள் நிறத்தை பிரதிபலிப்பீர்கள். அதாவது நீங்கள் பாரபட்சம் அல்லாதவராக இருப்பீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும், அந்த இடத்தின் ஒரு பகுதியாக இருப்பீர்கள். அந்த மாதிரி, வைராக்ய நிலையில் இருந்தால், வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும் ஆராய முடியும்.

வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்? தொடரின் பிற பதிவுகள்
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert