மஹாசிவராத்திரி 2015

mahashivarathri_2015

18 Feb - 7.10am

சத்குருவின் செய்தி:

இன்று நீங்கள் விழித்திருந்ததற்கான பலன்கள் உடனடியாகத் தென்படவில்லை என்றாலும், இது உங்கள் வாழ்வில் பல்வேறு நிலைகளில் செயல்படும்.

இதை வெறும் ஒரு நாளின் கொண்டாட்டமாக மறந்திடாமல், இதை நீங்கள் மலர்வதற்கான வாய்ப்பாய் பாருங்கள்.

வேறு எதுவாக நீங்கள் ஆனாலும், ஆகாவிட்டாலும், அற்புதமான உயிராய் நீங்கள் மலர்வதை மட்டும் யாரும் தடுக்கமுடியாது.

அதன் முதல் படியாக, இன்று நீங்கள் வீட்டிற்குச் சென்றதும், உங்களைப் பொறுத்தவரை மிக உயர்ந்த உயிரிற்கு இருக்கக்கூடிய 3 தன்மைகள் என்ன என்பதை குறித்துக் கொள்ளுங்கள். அந்த மூன்று குணங்களும் உங்களிடம் மலர்வதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யுங்கள்.

இது அடுத்தவருக்கு வேண்டியவற்றை செய்வதல்ல… உங்களுக்கு வேண்டியவற்றை செய்வது. உங்களுக்கு வேண்டியவற்றைக் கூடச் செய்யவில்லை எனில், உங்கள் வாழ்வே வீணாகிடும்.

இதன்பின், ஷிவ ஷம்போ உச்சாடனத்துடன், மஹாசிவராத்திரி விழா நிறைவிற்கு வந்தது.

18 Feb - 6.02am

மஹாசிவராத்திரி நிறைவு

சத்குருவின் நன்றிகள்:

தமிழ்நாடு காவல்துறை, இன்று இந்தவிழா இவ்வளவு அமைதியாக நடந்ததற்கு அவர்களும் முக்கிய காரணம்.

மற்றும் வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை,

மிக அதிக அளவில் ஒத்துழைத்து இருக்கும் தமிழ்நாடு மின்துறை, தமிழ்நாடு அரசுப் பேருந்து மற்றும்

தீயணைப்புத் துறைக்கும் கூட, அவர்களுக்கு இன்று வேலையே இல்லாவிடினும், இங்கிருந்து அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக் கொண்டதற்கு!

இது தவிர ஆயிரமாயிரம் அன்பர்கள் உலகெங்கிலும் இருந்து இதை நேரிடையாகப் பார்ப்பதற்கு ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி அலைவரிசைகள், பத்திரிக்கை அன்பர்கள் மற்றும் இன்றைய நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை பார்த்துக் கொண்ட GMR குழுமத்திற்கும் எங்கள் நன்றிகள்!

உள்ளூர் பஞ்சாயத்திற்கும், இன்று உங்களை விழிப்புடன் வைத்திருக்க புத்துணர்வோடு நிகழ்ச்சிகள் வழங்கிய கலைஞர்களுக்கும், மஹாதேவனின் அருளிற்கும், உங்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றிகள்!

18 Feb - 5.40am

20 நிமிடங்களே உள்ளன திருவிழா நிறைவுற…

சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது…

உணர்வுப் பூர்வமான பாடல்கள் பலவற்றை இவர்கள் பாடிக் கேட்டிருக்கிறோம்… முதல்முறையாக நகைச்சுவை ததும்பம் பாடல் ஒன்றை இவர்கள் இயற்றி இருக்கிறார்கள்.

‘கொண்டாட்டம், திண்டாட்டம்’ எனும் இப்பாடலில், சினிமா பார்த்தால் கொண்டாட்டம், காலை எழுந்து யோகா செய்யவேண்டும் என்றால் திண்டாட்டம்…

புரிந்து செய்தால் கொண்டாட்டம், இல்லையெனில் திண்டாட்டம் என்பது போல், ஒவ்வொரு பருவத்திற்கும் வரிகள் எழுதி இருக்கிறார்கள்.

இப்போது அலை அலை பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது!

18 Feb - 5.15am

செயலில் ஈடுபட்டிருந்த தன்னார்வத் தொண்டர்களின் பகிர்தல்

தியானலிங்கம்

கூட்டம் உண்டு நெரிசல் இல்லை

செயல் உண்டு பதட்டம் இல்லை

இருள் சூழ்ந்த இரவில்

அருள் உண்டு ஆர்ப்பாட்டம் இல்லை

என தியானலிங்கம் முழுவதும் இன்று கூட்டம் நிரம்பியிருந்தது. எல்லாம் அதிசயமாகத்தான் இருக்கிறது. தமிழ் தெலுங்கு இந்தி ஆங்கிலம் என எல்லா மொழியினரும் எல்லா மதத்தினரும் விளக்குகள் ஏற்றியது ஏற்றியபடி, மலர்கள் அர்ப்பணித்தது அர்ப்பணித்தப் படி தியானலிங்க வளாகத்தில் காணும் காட்சிமனதில் பூரிப்பையும், ஒரு தனி நிறைவையும் உண்டாக்குகிறது.

பகிர்தல்

ஐந்து வருடங்களாக தியானலிங்க வளாகத்தில் தன்னார்வதொண்டு புரியும் ஒருவர் பகிர்ந்ததாவது “நாளுக்கு நாள் இங்கே கூட்டம் அதிகரிப்பது ஆனந்தத்தை அளிக்கிறது. மேலும் மேலும் இங்கே மக்கள் வர வேண்டும் என என் உள்ளம் ஏங்குகிறது. தியானலிங்கத்தில் செயல் இருப்பதால் என்னால் இன்றைய நிகச்ச்சியை காண இயலாது . இங்கே வரும் மக்கள் தியானலிங்கத்தை உணர வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோள். சிவராத்திரிக்கு முந்தைய நாளும் கண் விழித்து செயல்களில் ஈடுபட்டோம். அதற்கு மறுநாள் இரவும் கண்விழித்து செயல் செய்ய வேண்டியிருக்கும். இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து கண்விழித்தாலும் சோர்வில்லாமல் இருக்க முடிகிறது. “என்று ஆனந்தமாய், அதே நேரத்தில் அதிசயமாய் பகிர்றார்.

18 Feb - 5.02am

உயிர்நோக்கம்..!

சத்குரு முதன்முதலாய், அவரே தமிழின் வார்த்தைகள் உபயோகம் செய்து எழுதிய கவிதை… உயிர்நோக்கம்.

அதன் பின்னே உயிர்நோக்கம் பாடல் எழுதப்பட்டது!

அவர் எழுதிய பாடலை அவர் பாடிமுடிக்க, இப்பொழுது சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா அப்பாட்டை இசைத்துக் கொண்டிருக்கிறது…

18 Feb - 4.34am

பார்த்திவ் மற்றும் குழுவின் துள்ளல் இசை

தூக்கம் எல்லாம் காணாமற் போய், முழு அரங்கமும் எழுந்து நின்று ஆடிக் கொண்டிருக்கிறது..!

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

18 Feb - 3.58am

மணி நான்கை நெருங்குகிறது…

மீண்டும் இங்கும் அங்கும் சிலர் கண் அயர ஆரம்பித்திட்டார்கள். தன் பின்னால் அமர்ந்து தூங்க ஆரம்பித்தவர்களை அருகில் சென்று உலுக்கி எழுப்பிவிட்டு, சிரித்துக் கொண்டே மேடையின் முழு நீளத்திற்கும் சத்குரு நடந்து செல்ல, பார்த்திவ் கோஹில் லும், அவரது குழுவும், தாளத்தின் வேகத்தை ஏற்றி, அரங்கத்தில் மீண்டும் உற்சாக சப்தம் எழுகிறது…

18 Feb - 3.53am

மேலும் சிவன் பற்றி அறிய…

மஹாசிவராத்திரிக்கு இரு வாரங்கள் முன்பு anandaalai.com ல், ‘சிவன் – என்றுமே நிரந்தர Fashion’ என்கிற தொடரில் சிவனைப் பற்றிய சில அரிய தகவல்களை பதிய ஆரம்பித்தோம். சிவன், யார் பெற்ற மகன், போதையில் சிவன், தமிழ்நாட்டுப் பெண்ணை மணக்க வந்த சிவன், சுடுகாட்டில் சிவன், காசியை வடிவமைத்த சிவன் என இன்னும் சில தலைப்புகளில் வெளியிட்டுள்ளோம் – படித்து மகிழ்ந்திடுங்கள்!

http://tamilblog.ishafoundation.org/shivan-endrume-niranthara-fashion/

18 Feb - 3.34am

சத்குருவுடன் சத்சங்கம்

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

18 Feb - 3.14am

நள்ளிரவில் ஆரம்பித்து, தியானலிங்கத்திற்கு பால் அபிஷேகம் தொடர்கிறது

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

18 Feb - 3.00am

நள்ளிரவு தியானம்… முடியும் தருணங்கள்

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

18 Feb - 2.53am

கைக்கு எட்டி, வாய்க்கும் எட்டிய தேனமுது..!

கரும்பு திண்ணக் கூலியாம்…

மஹாசிவராத்திரி அன்று கண்விழித்திருக்க,

சத்குரு உடனிருந்து

இசை நிகழ்ச்சிகளும் வேறு!

கரும்பின் இனிப்பை

மறந்திட்ட எனக்கு

தேனமுது கிடைத்திருக்கிறது!

இனிப்பின் சுவையை என்றும் உணர்வேனோ

இனியேனும் மறவாமல் இருப்பேனோ..?

18 Feb - 2.38am

நள்ளிரவு தியானம்…

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

18 Feb - 2.30am

பதறி எழுந்து திடுக்கிட்டவர்களை…

ஆசுவாசப்படுத்தும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இனிமையான இசை..!

18 Feb - 2.19am

கேரளத்தின் மத்தளங்கள் முழங்குகின்றன!

தப்பித்தவறி யாரேனும் உறங்கி இருந்தாலும், இனி அதற்கு வாய்ப்பே இல்லை…

கேரளத்தின் மத்தளங்கள் முழங்கிக் கொண்டிருக்கின்றன!

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

18 Feb - 2.16am

ஷிவ ஷிவ ஷிவாய

சத்குரு மேடையில் நடந்துசென்று ஷிவ ஷிவ ஷிவாய ஆரம்பித்து வைக்க, அனைவரும் ஒரே குரலாய் சேர்ந்து கைதட்டி பாடிக் கொண்டிருக்கின்றனர்….

18 Feb - 2.07am

நடன நிகழ்ச்சிகள்…

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

18 Feb - 2.05am

இன்று நிகழ்ந்த புது புத்தக, டிவிடி வெளியீடுகள்

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

18 Feb - 1.47am

சிவனிற்காக மாபெரும் இடி முழக்கம்!

Face book மூலமாக பலருக்கும் சிவன், மற்றும் சிவராத்திரியின் மகத்துவம் பற்றி அறிவிப்பதற்காக, thunderclap முயற்சியில் இறங்கியது ஈஷா. இதில் 70 லட்சம் மக்களை இந்த செய்தி சென்றடைந்துள்ளது.

சென்ற வருடம் 14 லட்சம் மக்களை சென்றடைந்த மஹாசிவராத்திரி thunder clap, இம்முறை 70 லட்சம் மக்களை எட்டியுள்ளது.

சிவனின் மகத்துவத்தை எல்லோரும் உணர்ந்திட வேண்டும், என்ற முயற்சிக்கு கைகொடுத்துள்ள எல்லாத் தன்னார்வ தொண்டர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தன் வழியாக மட்டுமே 38 லட்சம் மக்களை இச்செய்தி சென்றடைய உதவிய கிரண் பேடி அவர்களுக்கும் இந்த தருணத்தில் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

18 Feb - 1.15am

ஆட வைத்த திருமதி.ஜீலா கான்

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

உணர்வுப்பூர்வமான பார்திவ் கோஹில்

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

ஆனந்தமான சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

அதிர வைத்த பத்மபூஷன். திரு. விக்கு விநாயக்ராம், அவரது மகன் திரு.செல்வகணேஷ் மற்றும் குழுவினர்

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

அதன்பின் ஒன்றாக தாளம் இசைத்து, அசர வைத்த திரு. விக்கு விநாயக்ராம் அவர்கள், திரு. செல்வகணேஷ் அவர்கள் மற்றும் நம் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழு

vikku-vinayaka-ram

குதூகலத்தில் மக்கள்

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

எழுந்து நின்று கைதட்டிய சத்குரு

18 Feb - 12.50am

ஈஷாவில் 20 வருட மஹாசிவராத்திரிக் கொண்டாட்டங்கள்!

18 Feb - 12.43am

மஹாசிவராத்திரி மஹா அன்னதானம்

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

17 Feb - 11.42pm

மேடையில் சத்குரு நடந்து செல்ல…

உணர்ச்சிப் பெருக்கில் மக்கள்

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

17 Feb - 11.24pm

நள்ளிரவு தியான குறிப்பபுகள்… நேரடி ஒளிபரப்பை காண முடியாதவர்களுக்கு

நள்ளிரவு சாதனா குறிப்புகள்: 11:10pm to 11:30 pm –சுக பிராணாயாமா; 11:30 to 11:50 pm – ‘ஆஉம்’ உச்சாடனை; 11:50 pm – 12:10 am – ‘ஆஉம் நமஷிவாய’ மஹாமந்திரம் உச்சாடனை

17 Feb - 11.23pm

இன்னும் சற்று நேரத்தில் நள்ளிரவு தியானம்…

டி.வி மூலம் நேரடி ஒளிபரப்போ, அல்லது இணையம் மூலம் ஒளிபரப்பை காண்கிறீர்கள் என்றால், சத்குருவின் குறிப்புகளை பின்பற்றி, அந்த தியானத்தில் ஈடுபடலாம்.

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

17 Feb - 11.08pm

சற்று நேரத்திற்கு முன் சத்குரு ஷிவ ஷிவாய பாட…

உற்சாக வெள்ளத்தில் மக்கள்…

சத்குரு ஷிவ ஷிவ ஷிவாய என துவக்கி வைக்க, சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் மெட்டில் ஷிவாய மந்திரம் அரங்கம் முழுவதும் துள்ளலை ஏற்படுத்தியது.

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

17 Feb - 9.47pm

ஆதியோகிக்கு மரியாதை செலுத்திய சத்குரு

பஞ்சபூத ஆராதனாவின் போது…

ஆதியோகிக்கு மரியாதை செலுத்திய சத்குரு

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

மஹாசிவராத்திரிக் கொண்டாட்டங்கள்…

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

திருமதி.ஜீலா கானின் இசையை ரசித்திட்ட தியான அன்பர்கள்…

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

17 Feb - 8.45pm

விழா துவங்கியவுடன் எல்லோரையும் சந்திக்க மேடையில் நடந்து வந்த சத்குரு!

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

17 Feb - 8.39pm

ஈஷா இல்லத்தை பார்வையிட வந்த திரு. ரவி வெங்கடேசன்

இன்று துவங்கப்பட்ட ஈஷா இல்லத்தை, மைக்ரோசாஃப்ட் இந்தியாவின்முன்னாள் தலைவர் திரு. ரவி வெங்கடேசன் அவர்கள் பார்வையிட வந்தார்…

ஈஷா இல்லம்!, Isha Illam

17 Feb - 8.29pm

முதுமையிலும் ஆனந்தம்… ஈஷா இல்லம்!

இன்று திருவண்ணாமலையில் துவங்கப்பட்டது!

முதுமையை அமைதியாய் மட்டுமல்ல, அழகாய், அருள் மடியில் கழித்திட பெரும் வாய்ப்பு.

ஈஷா இல்லம்!, Isha Illam

முன்னாள் உயர் நீதி மன்ற நீதிபதியும், யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்தின் தலைவருமான திரு அருணாச்சலம்,

நல்லவன் பாளையம் பள்ளி வாசல் ஆலோசகர் திரு பாட்சா,

உலக மாதா பள்ளிவாசலின் தந்தை திரு ஃப்ரேன்சிஸ் சேவியர்

ஆகியோர் உடனிருந்து இந்த இல்லத்தை திறந்து வைத்தனர்.

17 Feb - 8.17pm

தியானலிங்கத்தில் சத்குரு

இன்று தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனா நிகழ்த்துவதற்கு சத்குரு வந்தபோது…

தியானலிங்கத்தில் சத்குரு

தியானலிங்கத்தில் சத்குரு

17 Feb - 8.12pm

சிவாங்கா – “உங்கள் பாதத்தில் நான் இருப்பேன்!”

இம்முறை 48 நாட்கள் சிவாங்கா விரதம் இருந்து சிவராத்திரியன்று வெள்ளியங்கிரி மலையை தரிசனம் செய்பவர்கள் 6000 சிவாங்காக்கள்.

இதில் சென்னை, நாகர்கோவில் மற்றும் பெங்களூரில் இருந்து மொத்தம் 44 சிவாங்காக்கள், 19 நாட்களாக பாதயாத்திரை மேற்கொண்டு இன்று எல்லாம் சிவ மயம் என்று வெள்ளியங்கிரி மலை ஏறியிருக்கிறார்கள்.

“பாதங்களில் வலியேற்பட்ட போது ஞாபகம் வந்தது ‘நீங்கள் பக்தியில் நடந்தால் நான் உங்கள் பாதங்களில் இருப்பேன்’ என்று சத்குரு சொன்ன அந்த வார்த்தை. இரண்டு நாட்கள் தொடர்ந்து வேலை செய்தாலே உடல் சோர்ந்து விடுகிறது. ஆனால் எப்படி தொடர்ந்து 19 நாட்கள் நடந்தோம் என்பது புரியவில்லை. குருவின் அருளின்றி இது சாத்தியமே இல்லை” – சிவாங்கா பகிர்வுகள்

மேலும் விபரங்களுக்கு: http://tamilblog.ishafoundation.org/madras-to-velliangiri/

17 Feb - 7.27pm

மஹாசிவராத்திரியின் முக்கியத்துவம்

17 Feb - 6.04pm

ஷிவ, ஷிவ, ஷிவாய…

மஹாசிவராத்திரி இரவெல்லாம் ஆனந்தம்… நான் கொண்டாடுகிறேன், நீங்களும் கொண்டாடுங்கள் என்கிறார், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொகுப்பாளினி, பிரியங்கா அவர்கள்

17 Feb - 5.45pm

சூர்யகுண்டம் முன்பு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் ஆதியோகி சிலை.
மற்றும் இவ்வருட மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெறும் இடம்.

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

அங்கு பரபரவென்று ஆனந்தமாக ஏற்பாடுகளை செய்யும் நம் தன்னார்வத் தொண்டர்கள்

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

17 Feb - 5.06pm

மஹாசிவராத்திரியில் பங்குபெறுங்கள்! அழைப்பு விடுக்கிறார் பிரபல பின்னணிப் பாடகர் திரு.உன்னிகிருஷ்ணன்

17 Feb - 5.00pm

நம் சேவாதார்களும் பங்கேற்ற மஹாசிவராத்திரி சாதனா

இம்முறை மஹாசிவராத்திரிக்காக நம்மைத் தயார்செய்து கொள்ள, சத்குரு மஹாசிவராத்திரி சாதனாவை வழங்கினார்கள். இதை மஹாசிவராத்திரிக்கு முந்தைய 21 (அ) 14 (அ) 7 (அ) 3 நாட்களுக்கு, ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார். முதல்முறையாக, நம் ஈஷா யோக மையத்தின் சேவாதார்களும் இதில் பங்குபெற்றனர். நாற்பதிற்கும் மேற்பட்ட சேவாதார்கள் இந்த சாதனாவில் ஈடுபட்டு, தினம் காலையும் மாலையும், ஒன்றாக சேர்ந்து யோகீஷ்வராய மந்திரத்தை உச்சரித்தனர்.

இந்த சாதனா பற்றி மேலும் விபரங்களுக்கு: http://tamilblog.ishafoundation.org/mahashivarathri-sadhana/

17 Feb - 4.21pm

இன்று வெளியாகும் ஈஷா புத்தகங்கள், டிவிடிகள்

இவற்றை வெளியிட, ஜி.எம்.ஆர் குழும நிறுவனங்களின் தலைவர் திரு. கிராந்தி மல்லிகாஜுனா ராவ் அவர்களும், பிரபல திரைப்பட இயக்குநர் திரு. S.A.சந்திரசேகர் அவர்களும் வருகை தருகிறார்கள்.

தமிழ் புத்தகங்கள்:

தியானலிங்கம் – மெய்ஞானத்தின் விஞ்ஞானம்.

அற்புதர். இப்புத்தகத்தில், மரபின் மைந்தன் முத்தையா அவர்கள், சத்குருவுடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

தமிழ் டிவிடிகள்:

திருமணம் – நில்! கவனி! செயல்படு… (சத்குரு, பாரத் மேட்ரிமோனி நிறுவனர் திரு.முருகவேல் ஜானகிராமன் அவர்களுடன்)

இல்லறத்தில் ஆன்மீகம் (சத்குரு, Dr. சீர்காழி சிவசிதம்பரம் அவர்களுடன்)

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

ஆங்கில டிவிடிகள் – In Conversation with the Mystic Series

1. Acting to Awakening, with Anupam Kher

2. The Mechanics of Health, with Dr. Devi Prasad Shetty

3. Of Love & Life, with Juhi Chawla

17 Feb - 2.06pm

ஜரூராக ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது…

… நம் தன்னார்வத் தொண்டர்களின் உற்சாகத்தில்:

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

நேற்று இரவு மலர்களை மாலைகளாகவும், அலங்காரத் தோரணங்களாகவும் மாற்றிய நம் தன்னார்வத் தொண்டர்களின் கைவண்ணம்…

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

தியானலிங்கம் அலங்காரங்கள்

மஹாசிவராத்திரி 2015, Mahashivarathri 2015

17 Feb - 12.29pm

Mahashivarathri

நிலவில்லா இரவு

நிகரில்லா ஆனந்தத்தின் கதவு

இணையில்லா சிவனின் இருப்பில்

உயிர் உருகிட…

இது நம் அனைவருக்கும் ஒரு வாய்ப்பு

கண் விழிக்கத் தயாராகுங்கள்! இன்று மஹாசிவராத்திரித் திருநாள்!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert