கீரை ஆம்லெட்

கீரை ஆம்லெட்

ஈஷா ருசி

முட்டை ஆம்லெட் தெரியும், ஆனா இப்படியும் ஒரு ஆம்லெட்டா… கம்பங்கூழ் சரி, ஆனா இந்தக் கூழ் செம டேஸ்ட்பா… உணவின் வகையையும், ருசியையும் எல்லைக்குள் கொண்டு வர முடியுமா என்ன? உணவுப் பிரியர்களே! சுவையும் சத்தும் கலந்த இரு பதார்த்தங்கள் உங்களுக்காக இங்கே…

கீரை ஆம்லெட்

தேவையான பொருட்கள்:

கீரை – 3 கப் (பாலக்கீரை, முருங்கை கீரை பொடியாக நறுக்கவும்) (எந்த வகை கீரை இருந்தாலும் போடலாம்)
குட மிளகாய் – 1 சிறியது (நறுக்கியது)
கோதுமை மாவு – ¾ கப்
கடலை மாவு – ¾ கப்
கான் பிளவர் (சோள மாவு) – ¼ கப்
ராகி மாவு – ¼ கப்
இஞ்சி – ¼ டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
சீரக தூள் – ¼ டீஸ்பூன்
கர மசாலா தூள் – ¼ டீஸ்பூன்
மிளகு தூள் (பெப்பர்) – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் நான்கு விதமான மாவுகள் மற்றும் கீரை, குடமிளகாய் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். பின் இஞ்சி, சீரகத்தூள் கர மசாலா தூள், மிளகுத்தூள், உப்பு போட்டு கலந்து தோசை மாவு பதத்திற்கு கலந்து தோசை மாதிரி வார்த்தால் சத்தான ஆம்லெட் ரெடி

பலாப்பழ கூல் ஷேக்

palapalacoolshake

தேவையான பொருட்கள்:

பலாப்பழம் – 1 கப்
தேங்காய் பால் – ½ கப்
வெல்லம் – 1/4 கப்
முந்திரி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

பலாப்பழம், தேங்காய் பால் (துருவிய தேங்காயை அரைத்து வடிகட்டியது) இரண்டையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி பாகு செய்து, ஆறியபின், அரைத்த கலவையுடன் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் நுரைப் பொங்க அரைத்துக் கொள்ளவும். இத்துடன் ஐஸ் கட்டிகள் சேர்த்து, மேலாக நறுக்கிய முந்திரியை தூவி பரிமாறவும். பருக மிகவும் நன்றாக இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert