ஆடை

 

ஆடை

துகிலின் வகையும் நெசவும் நிறமும்
கரங்களையும் கண்களையும் கவர்ந்திழுக்கின்றன.
தூய்மையில்லாக் கண்களுக்கோ
ஆடை என்பது ஆசைக்கும் வேட்கைக்கும்
தடையாய் மட்டுமே தெரியும்..ஆனால்
நெசவுசெய்வோரும் சாயம்சேர்ப்போரும்
கைவினைக் கலைஞரும் கருதியும் பாராத
கலைநயத்துடனே உடலெனும் துகிலை
படைத்தவன் நமக்குப் படைத்துக் கொடுத்தான்.
உடலெனப் படுவதே ஒப்பிலா அழகு
உடைகொண்டதனை மறைப்பதுமென்ன

படைத்தவன் கைவினையில் பெரிதாய் மயங்கி
படைத்தவனைத் தவற விடாதீர்கள்
உடலெனும் அற்புதம் யாது தெரியுமா??
சுயநலம் மிக்க அந்த ஒன்றின்..
ஒப்பிலா ஒன்றின் உறைவிடம் அதுவே!!

 

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert