ஒரு முறை நெஞ்சு வலி வந்துவிட்டால், டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், வலி குறைகிறதோ இல்லையோ, மன உளைச்சலும், மரண பயமும் நம்மை ஆட்டிப் படைத்துவிடும். அப்படி இருந்த ஒருவர், ஈஷா புத்துணர்வு மையத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டு, அதிலிருந்து முற்றிலும் வெளிவந்த கதையை நம்முடன் இங்கே நெகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறார்...

S.வேல்கண்ணன், காஞ்சிபுரம்.

நான் 2003ல் கடலூரில் ஈஷா வகுப்பில் பயிற்சி பெற்றேன். எனக்கு தற்போது 75 வயது. எனக்கு இதயத்திலிருந்து மூளைக்கு செல்லும் இரத்தக் குழாயில் 80% அடைப்பு உள்ளதால் அதற்காக சென்னையில் தனியார் மருத்துவமனையில் 2007ம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வந்தேன்.

இருதய அறுவை சிகிச்சைக்கு உத்திரவாதம் தருகிறோம், ஆனால் மூளைக்கு செல்லும் இரத்த குழாய் அடைப்பு நீக்கும் சிகிச்சைக்கு உத்திரவாதம் கொடுக்க முடியாது என்றும் சொல்லிவிட்டார்கள்.

2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிகிச்சையின் போது இருதயப் பரிசோதனையும் (angiogram) செய்யப்பட்டது. அப்போது இருதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதற்கு இருதய அறுவை சிகிச்சை (open heart surgery) செய்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். மூளைக்கு செல்லும் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பிற்கும் அதே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியுமென்றும், ஆனால் அவ்வாறு சிகிச்சை செய்யும்போது எனக்கு ஒரு பக்க கை, கால், கண் பார்வை, பேச்சு போன்றவைகள் செயல்படாமல் போக நிறைய வாய்ப்பு உள்ளது என்றும் சொன்னார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இருதய அறுவை சிகிச்சைக்கு உத்திரவாதம் தருகிறோம், ஆனால் மூளைக்கு செல்லும் இரத்த குழாய் அடைப்பு நீக்கும் சிகிச்சைக்கு உத்திரவாதம் கொடுக்க முடியாது என்றும் சொல்லிவிட்டார்கள். மேலும் இந்த அறுவை சிகிச்சையை விரைவில் செய்தாக வேண்டும் எனவும் மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். வேறு இரண்டு மருத்துவமனைகளை அணுகியபோதும் இதே பதில்தான் கிடைத்தது.

நான் அறுவை சிகிச்சைக்கு பயந்துகொண்டு அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்துகளை உட்கொண்டு வந்தபோது, 26.12.2010ல் stroke வந்து நெஞ்சுவலி அதிகமானது. உடனடியாக மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்கள் சிகிச்சை எடுத்தேன்.

அறுவை சிகிச்சை விரைவில் செய்துகொள்ள வேண்டும் என அப்போதும் அறிவுறுத்தப்பட்டேன். அந்த stroke வந்ததிலிருந்து எனக்கு நெஞ்சு வலி, தலைசுற்றல் அடிக்கடி வர ஆரம்பித்தது. அசதியாகவே இருந்தது. படுக்கையிலேயே இருந்தேன். சிறிது தூரம் நடந்தாலும், குனிந்தாலும் நெஞ்சுவலி, தலை சுற்றல் வரும். மிகவும் மனதில் வேதனையோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன்.

வலி வரும்போது நாக்கின் அடியில் ஒரு மாத்திரையை வைத்துக் கொண்டால் வலி குறையும். நெஞ்சுவலி வரும்போது தினமும் குறைந்தது 4 முதல் 5 மாத்திரைகள் உட்கொண்டு சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அறுவை சிகிச்சையில் விருப்பம் இல்லாதிருந்தேன்.

எனக்கு இவ்வாறு குறுகிய காலத்தில் நெஞ்சுவலி குணமடைந்ததை நினைக்கும்போதெல்லாம் ஆனந்த கண்ணீர் கொட்டுகிறது. கத்தியின்றி இரத்தமின்றி இந்த சிகிச்சை வெற்றிபெற்றது வியப்பாக உள்ளது.

இத்தருணத்தில் ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ள எனது உறவினர் திருமதி.மஹேஷ்வரி அவர்கள் அங்குள்ள ஈஷா புத்துணர்வு மையத்தில் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சொன்னார்கள். அவர் சொன்ன வார்த்தைகள் எனக்குள் நம்பிக்கையை உண்டு பண்ணின. நானும் 13.03.2011 அன்று ஈஷா புத்துணர்வு மையத்தில் சிகிச்சைக்கு சேர்ந்தேன்.

அங்கு, எனது உடல் நிலையை நன்கு பரிசோதித்து, ஏற்கனவே சிகிச்சை பெற்ற மருத்துவர்களின் அறிக்கைகளையும் ஆய்வு செய்து, எனது இதயத்திற்கு செல்லும் மூன்று இரத்த நாளத்தில் உள்ள அடைப்பையும் மூளைக்கு செல்லும் இரத்த நாளத்தில் உள்ள அடைப்பையும் குணப்படுத்தமுடியும் என ஆறுதல் சொன்னார்கள். இதனை கேட்டதும் எனக்கு என்னையும் அறியாமல் கண்ணீர் கொட்டியது. மனதில் தெம்பும் கூடியது.

அன்றிலிருந்து அவர்கள் வழங்கிய மருந்துகளையும், பத்திய உணவுகளையும் முழு நம்பிக்கையுடனும் உட்கொண்டு, அவர்கள் சொல்லியபடி லிங்கபைரவியில் ½ மணி நேரமும், தியானலிங்கத்தில் 1 மணி நேரமும் தியானத்தில் இருந்தேன்.

ஒரு வார காலத்தில் நெஞ்சுவலி குறைய ஆரம்பித்தது. வலி மாத்திரை தினத்திற்கு இரண்டாக குறைந்தது. இரண்டாம் வாரத்தில் மேலும் இருதயவலி குறைந்து பிறகு வலியே இல்லாததால் வலிமாத்திரையே தேவையில்லாமல் போனது.

01.04.2011ல் எனது உடல் பூரண குணமடைந்த நிலையில் உள்ளேன். எனக்கு இவ்வாறு குறுகிய காலத்தில் நெஞ்சுவலி குணமடைந்ததை நினைக்கும்போதெல்லாம் ஆனந்த கண்ணீர் கொட்டுகிறது. கத்தியின்றி இரத்தமின்றி இந்த சிகிச்சை வெற்றிபெற்றது வியப்பாக உள்ளது. உண்மையில் ஈஷா மையத்தில் மாபெரும் சக்தி உள்ளதை என்னால் அறிய முடிந்தது.

ஏப்ரல் மாத இறுதி வரை ஈஷா மையத்தில் தங்கியிருந்து லிங்கபைரவி, தியானலிங்க சக்தி அதிர்வுகளை பூரணமாகப் பெற்று, மருந்துகளையும் முறைப்படி உட்கொண்டு சென்னை திரும்பினேன்.

மேலும் ஈஷா புத்துணர்வு மையத்தில் உள்ள பிரம்மச்சாரினி இரண்டு மருத்துவர்கள் மற்றும் உடன் இருந்த அலுவலர்கள் எனக்கு சிசிச்சை அளித்ததை எனது ஆயுள் உள்ளவரை மறக்க முடியாது.

சத்குரு அவர்களுக்கும், ஈஷாவிற்கும் கோடான கோடி நன்றிகள்.