காசியின் ரகசியம்

4 jan 13 ( 2nd)

புனிதமான கங்கை நதித் தீர்த்தம், அதில் மிதந்து வரும் சடலங்கள், சக்தி அதிர்வுகளுடன் விஷ்வநாதர், எந்நேரமும் கனன்று கொண்டிருக்கும் சுடுகாட்டு மேடை… இப்படிப் புதிர்களும் புனிதங்களும் நிறைந்த காசியின் ரகசியங்களுக்கு விடை தருகிறது இந்த ஒளிப்பேழை.

காசியின் ரகசியம் DVD’யின் முன்னோட்டம் இங்கே..

‘காசிக்குப் போறேன்’ என்று நீங்கள் சொல்லியவுடன், ‘ஏன் என்னாச்சு…?’, ‘அதுக் கெல்லாம் இன்னும் வயசு இருக்கு…’, ‘ஏன் சன்யாசி ஆயிடலாம்னு முடிவு பண்ணீட்டியா?’ என விமர்சனக் கேள்விகள் காத்திருக்கும். உண்மையில் ‘காசி வாழ்வை முடித்துக் கொள்வதற்க்காக உருவாக்கப்பட்டதல்ல வாழ்வை ஆழமாக உணருவதற்காக’ எனும் உண்மையை உணர்த்துகிறது இந்த ஒளிப்பேழை.

இந்த பூமியில் குறிப்பிட்ட சில இடங்கள் மற்ற இடங்களைவிட ஷக்தி மிக்க அதிர்வுகளைக் கொண்டும் மனித விழிப்புணர்வை உயர்த்தும் வகையிலும் அமைந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு இடமாக காசி உள்ளது.

இந்த ஒளிப்பேழையிலிருந்து சில கேள்விகள்:

  • காசி நகரம் அமைந்துள்ள இடத்தின் சிறப்பு என்ன?
  • நம் உடலில் இருக்கும் சக்கரங்களுக்கும் காசி நகர வீதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் கோவில்களுக்கும் என்ன தொடர்பு?
  • பல அந்நிய படையெடுப்புகளையும் ஆக்கிரமிப்புகளையும் தாண்டி காசி சக்தி மிக்க அதிர்வுகளுடன் இருப்பது எப்படி?
  • காசியில் இறந்தால் முக்தி கிடைக்குமா?

சத்குரு அவர்கள் காசி நகரம் சென்று அங்கு நிலவும் சக்தி நிலையையும் அதன் பின்னாலிருந்து செயல்படும் தொழில் நுட்பத்தையும் உள்ளுணர்வால் உணர்ந்து வெளிப்படுத்த, இதோ உங்கள் திரையில் இந்த ஒளிப்பேழை மூலம் காசியின் ரகசியங்கள் அம்பலமாகின்றன!

பஜ விஷ்வநாதம் பாடலும் காட்சிகளின் பின்னணி இசையும் நம்மை காசிக்கே அழைத்துச் செல்கின்றன…
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert