காளான் சூப்

kalan-soup

ஈஷா ருசி

சூடான பானம் தரும் புத்துணர்விற்கு ஈடுஇணைதான் ஏது? இதோ நீங்கள் சுவைக்க, நொடியில் சமைக்க சத்தான காளான் சூப் மற்றும், நூடுல்ஸ் சூப். உங்கள் வீட்டிலும் ட்ரை பண்ணிப் பாருங்கள்!

காளான் சூப்

தேவையான பொருட்கள்:

காளான் – 100 கிராம்
தண்ணீர் – 1/2 லிட்டர்
ஆப்பிள் தக்காளி – 2 (வேக வைத்து அரைத்து வடிகட்டியது)
வெள்ளை மிளகுத்தூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 2 ஸ்பூன்
வெண்ணெய் – 2 ஸ்பூன்
கான்பிளவர் – 25 கிராம்
பால் – 50 மில்லி

செய்முறை:

  • தண்ணீரில் காளானை வேக வைத்து வெந்தவுடன் தக்காளி பேஸ்ட்டை ஊற்ற வேண்டும்.
  • கொதித்தவுடன் வெள்ளை மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை வெண்ணெய், கான் பிளவர் மாவு போட்டு கொதிக்க வைக்கவும்.
  • இறுதியாக பால் ஊற்றி இறக்கவும்.

நூடுல்ஸ் சூப்

Noodles soup

தேவையான பொருட்கள்:

சைனீஸ் நூடுல்ஸ் – 50 கிராம்
கேரட் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
கீரின் பீன்ஸ் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
முட்டைக்கோஸ் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
வேக வைத்த தக்காளி – 4 பீஸ் (அரைத்து வடிகட்டவும்)
வெள்ளை சர்க்கரை – 20 கிராம்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கு ஏற்ப
பால் – 1/2 டம்ளர்
கான்பிளவர் – 100 கிராம்

செய்முறை:

  • ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி கேரட், கீரின் பீன்ஸ், முட்டைக்கோஸை நன்றாக வேக வைக்கவும்.
  • வெந்தவுடன் சைனீஸ் நூடுல்ஸ் போட்டு, அரைத்து வைக்கப்பட்ட தக்காளி பேஸ்ட், கான் பிளவர் போட்டு கொதிக்க வைக்கவும்.
  • இறுதியாக மிளகுத்தூள், உப்பு, வெள்ளை சர்க்கரை, பால் ஊற்றி இறக்கிப் பருகலாம்.



இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert