சமீபத்தில் தான் சென்று வந்த கைலாய யாத்திரையைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விவரிக்கிறார் சத்குரு. படித்து மகிழுங்கள்!

கைலாஷ் செல்வது இது பத்தாவது முறை. ஆனாலும் அதன் பிரம்மாண்டம் ஒவ்வொரு முறையும் வியப்பூட்டுவதாகவே இருக்கிறது. விசா வழங்கும் முறையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த முறை ஏற்பாடுகள் செய்வது பெரும் சோதனையாக இருந்தது. நமது வெளியுறவுத் துறை அமைச்சர் உதவி இல்லாமல் இந்த பயணம் நடந்திருக்காது. இந்திய குடிமக்களில், ஈஷா குழுவில் சென்றவர்கள் மட்டுமே இந்த வருடம் கைலாஷ் செல்ல முடிந்தது.

அனைத்து குழுக்களும் பத்திரமாக, நல்ல நிலையில் சென்று வந்தார்கள். இன்னும் இரு குழுக்கள் காத்மாண்டு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பருவத்தில், சமயங்களில், நாள் கணக்கில் கைலாயம் மேகக் கூட்டத்தில் மறைந்திருக்கும். ஆனால் அந்த அருளினால், கடந்த பத்து வருடத்தில் ஈஷாவில் இருந்து சென்ற ஒரு குழு கூட தரிசனம் கிடைக்காது திரும்பியதில்லை.

அழகிய, தனித்துவமான நேபாள தேசம் பூகம்பத்திற்கு பிறகு நிலை குலைந்து இருக்கிறது. சுற்றுலாவும், பொருளாதாரமும் பெருத்த அடி வாங்கி இருக்கின்றன. சாகச சுற்றுலாவுக்கேற்ற நிலப்பரப்பும், புனித யாத்திரை மேற்கொள்ள பல பழமையான இடங்கள் செழித்திருக்கும் ஒரு தேசம் இது. குறிப்பாக இந்தியாவுக்கு இது ஒரு சிறந்த யாத்திரை தலம். நேபாளத்தில் உள்ள அற்புதமான சாத்தியங்களை சரியான முறையில் முன் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

Love & Grace

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.