ஈஷா யோகா மையத்திலும் ஈஷா கிளை மையங்களிலும் நடந்தவை, இந்த வார நிகழ்வுகளில் இங்கே உங்களுக்காக...

அண்ணாநகரில் ஒரு புதிய துவக்கம்:

சத்குருவின் ஞானோதயத் திருநாளான செப்டம்பர் 23ம் தேதியன்று, சென்னை அண்ணா நகரில், புதிதாக ஒரு சாதனா ஹால் திறக்கப்பட்டது. இத்திறப்பு விழாவில் 430 தியான அன்பர்கள் கலந்து கொண்டனர். தியான அன்பர்கள், தங்கள் தினசரி சாதனாவிற்காக இந்த ஹாலை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
முகவரி: ஈஷா யோகா மையம், பிளாட் எண்: 570, முதல் தளம், பார்க் ரோடு, ஷிவா விஷ்ணு கோவில் எதிரில், அண்ணாநகர் மேற்கு, சென்னை. தொ.பே: 8300035000

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கிராமப்புற மேம்பாடு:

கோவை வெள்ளியங்கிரி மலைச்சாரலில் உள்ள ஈஷா யோகா மையத்தைச் சுற்றி அமைந்திருக்கும் கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் புத்துணர்வை ஏற்படுத்தும் விதமாக, மையத்தின் சார்பில் நம் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரியை கற்றுக் கொடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் படியாக, சிலம்பம் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நரசிபுரம், தேவராயபுரம், காந்தி காலனி, நாதேகவுண்டம்புதூர் ஆகிய கிராமங்களிலிருந்து 125 மாணவர்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மாணவிகளுக்காக, மையத்தில், பரதநாட்டிய வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் 20 மாணவிகள் கலந்து கொண்டு நாட்டியம் பயின்று வருகின்றனர். மேலும் சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவின் குழுவினரால், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இசைப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

27 oct 13 - mid 4

பசுமைப் பள்ளி இயக்கத்தின் துவக்கம்

அக்டோபர் 23ம் தேதி, ஈஷா பசுமைக்கரங்களும், திருச்சி பள்ளி கல்வித்துறையும் இணைந்து, திருச்சியில் பசுமைப் பள்ளி இயக்கத்தைத் துவக்கினர். திருச்சியில் உள்ள E.R. மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சியை, மாவட்ட மேயர் திருமதி. A. ஜெயா அவர்கள் துவக்கி வைத்தார். திருச்சி மாநகராட்சி ஆணையர் திரு. V.P. தண்டபாணி, 8வது வார்டு உறுப்பினர் திரு. D. சுதாகர், 9வது வார்டு உறுப்பினர் திரு. S. சகாதேவ பாண்டியன், மாவட்ட கல்வி அதிகாரி திருமதி. ஸ்வர்ணலதா, மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் திருமதி. P. வசந்தா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இத்திட்டம், 400 பள்ளிகளை ஒன்றிணைத்து, பள்ளிகளின் தேசிய பசுமைப் படை(NGC) மாணவர்களைக் கொண்டு, 8 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்கும் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த 400 பள்ளிகளின் ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

27 oct 13 - mid 5

27 oct 13 - mid 3

"ராஜா ராணி"சில்க்ஸில் மரக்கன்று விநியோகம்

திருவாரூர் மாவட்டம் திருத்துரைப்பூண்டியில், அக்டோபர் 20ம் தேதியன்று, "ராஜா ராணி சில்க்ஸ்" என்ற புதுக்கடையை உணவுத்துறை அமைச்சர் திரு. காமராஜ் அவர்கள் திறந்து வைத்தார். இத்திறப்பு விழாவில், ஈஷா பசுமைக் கரங்கள் சார்பில் 800 மரக் கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.

27 oct 13 - mid 1

27 oct 13 - mid 2