ஈஷா யோகா மையத்தில் நடந்த கொண்டாட்டங்களையும், சத்குருவின் அமெரிக்க சுற்றுப்பயண நிகழ்வையும் இங்கே உங்களுக்காக பதிகின்றோம்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஈஷா யோகா மையத்தில் புத்த பூர்ணிமா கொண்டாட்டம்

ஈஷா யோகா மையத்தில் புத்த பூர்ணிமா மே 14ம் தேதி மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இவ்விழாவில் பெருவாரியாக கலந்துக் கொண்டனர். மாலை நடந்த குருபூஜை மற்றும் புனிதமான புத்த மந்திர உட்சாடனைகள் இவ்விழாவின் முக்கிய பகுதியாக அமைந்தது. புத்த பௌர்ணமி கொண்டாட்டங்களைத் தொடர்ந்து மிகவும் சக்திவாய்ந்த லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலமும் நடைபெற்றது. புத்த பௌர்ணமி நாள், தமிழ் வருடத்தின் முதல் பௌர்ணமியான சித்ரா பௌர்ணமியாகவும் அமைந்ததால், இதை முன்னிட்டு, தென்கைலாயம் என்று அழைக்கப்படும் புனித வெள்ளியங்கிரி மலைக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், மலையேறி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த மக்களில் பெரும்பாலானோர் தியானலிங்க தரிசனத்திற்காக ஈஷா யோகா மையத்திற்கும் வந்திருந்ததால், தியானலிங்க வளாகத்தில் திரளான மக்கள் கூட்டத்தை காண முடிந்தது.

1
2
3
4

சத்குருவுடன் டாக்டர். ஜேம்ஸ் டோடி

சத்குருவுடனான "In Conversation" என்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் (Stanford University)நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். திரு ஜேம்ஸ் டோடி கலந்துகொண்டார். மே 13ம் தேதியன்று நடந்த இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்களும் அமெரிக்காவின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த தியனா அன்பர்களும் கலந்துகொண்டனர். இந்த உரையாடலில் "கருணை" என்ற அம்சத்தைப் பற்றின பல கேள்விகளுக்கு விடையளித்தார் சத்குரு.

5
6