7
5

ஈஷா ஹோம் ஸ்கூலில் கண்காட்சி

ஜூன் 4ம் தேதி, ஈஷா ஹோம் ஸ்கூலில் ரோபோடிக்(robotic workshop)வொர்க்ஷாப் வெகு நேர்த்தியாக நடந்தது.

2
3

சத்குருவுடன் ஒரு சத்சங்கம்

ஜூன் 8ம் தேதி பெங்களூருவில் தன்னார்வத் தொண்டர்களுக்கு சத்குருவுடன் சத்சங்கம் நடைபெற்றது. சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசை முழக்கம், கூட்டு தியானம், கேள்வி பதில்கள் என்று களைகட்டிய இந்த ஆன்மீக மாலையில், 2000 தியான அன்பர்கள் கலந்துகொண்டனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

9
8

மும்பை கண்காட்சி

மும்பை கண்காட்சி மையத்தில் ஜூன் 14, 15 ஆம் தேதிகளில் நடந்த அரசு சாரா அமைப்புகளின் செயல்திட்ட கண்காட்சியில், 180 அரசு சாரா நிறுவனங்களும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் கலந்துகொண்டு, தத்தமது நாட்டில் தாங்கள் ஆற்றும் பொதுநலப்பணிகளை வெளிப்படுத்தினர். இதில், ஈஷாவின் நலத்திட்டங்களும் காட்சிக்கு இடம்பெற்றன. இதில் பங்கேற்ற நமது குழுவினர், இது நமக்கு புதிய பல அனுபவங்களை கொடுத்தது என்றனர்.

10

சத்குருவுடன் ஈஷா யோகா

பல ஊர்களில் நடைபெற்ற சத்குருவுடனான ஈஷா யோகா வகுப்புகளுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பை அடுத்து இரண்டாவது சுற்றாக சென்னையில் மற்றுமொரு ஈஷா யோகா வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னை மக்களுக்கு கிடைத்துள்ள அற்புத வாய்ப்பு, தவறவிட்டுவிட வேண்டாம்.
மேலும் விவரங்களுக்கு: 9444922290 / 9789983260
மின்னஞ்சல்:chennai@ishayoga.org

1

லிங்கபைரவி யந்திரா வைபவம்

வரும் ஜுன் 23ம் தேதி லிங்கபைரவி யந்திரா வைபவம் சத்குருவின் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் சத்குருவிடமிருந்து நேரடியாக லிங்கபைரவி மற்றும் அவிக்ன யந்திரங்களை பெற முடியும்.
விவரங்களுக்கு: 814 444 3335
மின்னஞ்சல்: yantra@lingabhairavi.org

4

தியானலிங்கம் பிரதிஷ்டை தினம்

தியானலிங்கம் உருவாக்கப்பட்டு இத்துடன் 14 வருடங்கள் பூர்த்தி ஆகிவிட்டன. தியானலிங்கத்தின் உருவாக்கத்திற்கு பிறகு இந்த உலகம் முன்பு போல் இல்லை என்பார் சத்குரு. நம் மீதும், இந்த உலகத்தின் மீதும் தீரா தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தியானலிங்கத்தின் 14வது வருட பிரதிஷ்டை தினத்தில் கலந்து கொள்ளுங்கள்.
இந்நிகழ்ச்சி ஜூன் 23ம் தேதி, ஈஷா யோகா மையத்தில், சத்குருவின் அருளுடன் பல்வேறு மதத் தலைவர்களின் முன்னிலையில் நடைபெற உள்ளது.
சர்வ சமயமும் சங்கமிக்கும் ஆனந்த சங்கமத்தில் எங்களுடன் இணைந்திடுங்கள்!