ஈஷாவில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

ஈஷாவில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!, Ishavil krishna jeyanthi kondattam

இந்த வாரம் ஈஷாவில் நிகழ்ந்த நிகழ்வுகள்…

ஈஷாவில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

அண்ட சராசரத்தையும் தன் வாயினுள் காட்டி லீலை புரிந்த கிருஷ்ணனுக்கு கோகுலாஷ்டமி விழா ஆகஸ்ட் 25ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஈஷா ஆசிரமவாசிகளும் தன்னார்வத் தொண்டர்களும் பலவித விளையாட்டுப் போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு களித்தனர். மாலை 3:30 மணியளவில் வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல் போன்ற பலவித பாரம்பரிய விளையாட்டுகளும், பல கேளிக்கை விளையாட்டுகளும் நடந்தேறின.

ஈஷாவில் சம்ஸ்கிருத தினம்!

குரு பௌர்ணமிக்கு அடுத்துவரும் பௌர்ணமி ‘ஷ்ரவண பௌர்ணமி’யாகும். ஒவ்வொரு வருடமும் இந்நாள் பாரதம் முழுக்க சம்ஸ்கிருத தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஈஷா சம்ஸ்கிருதி சார்பில் இந்த வருடம் கோகுலாஷ்டமி கொண்டாட்டத்தோடு சேர்ந்தாற்போல சம்ஸ்கிருத தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, சம்ஸ்கிருத மொழியில் கிருஷ்ண அவதாரத்தை விளக்கும் நாடக நிகழ்ச்சி ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களால் வழங்கப்பட்டது.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert