ஈஷா – சிறந்த யோகா சுற்றுலா மையம்

ஈஷா – சிறந்த யோகா சுற்றுலா மையம், Isha - sirantha yoga sutrula maiyam

ஈஷாவிற்கு கிடைத்த விருது குறித்தும், ஈஷா வித்யா பள்ளியில் நிகழ்ந்த விளையாட்டு தினம் குறித்தும் புகைப்படங்களுடன் சென்ற வார நிகழ்வுகள் இங்கே!

ஈஷா – சிறந்த யோகா சுற்றுலா மையம்

‘சிறந்த யோகா சுற்றுலா மையம்’ (Best Yoga Toursim Center) என்ற விருது ஈஷா யோகா மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய சுற்றுலா துறையுடன் இணைந்து சுற்றுலா வழிகாட்டி புத்தக நிறுவனமான ‘மதுரா வெல்கம்’ இந்த விருதினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரா வெல்கம் சேர்மேன் திரு. V.K.T.பாலன் கூறுகையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டினரை வெகுவாக ஈர்க்கும் தமிழகத்தின் அங்கீகரிக்கப்படாத சுற்றுலா தலங்கள் இந்த விருது மூலம் அங்கீகரிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

ஈஷா வித்யாவில் சிறப்புற்ற விளையாட்டு தினம்

வனவாசி ஈஷா வித்யா பள்ளியில் விளையாட்டு தினம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திரு.பழ.ஜீவானந்தம் திரு. M.M.இரத்தினவேல் மற்றும் திரு. C.இரங்கநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 10ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி S.ருத்ராவிற்கு பரிசு வழங்கப்பட்டதோடு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert