ஈஷா கிராமோத்சவம் 2015

20150823_SUN_0375-e-edited
20150823_SUN_0545-e-edited
20150823_SUN_0514-e-edited
20150823_SUN_0478-e-edited
20150823_SUN_0465-e-edited
20150823_SUN_0380-e-edited
20150823_SUN_0309-e-edited
20150823_SUN_0285-e-edited
20150823_SUN_0281-e-edited
20150823_SUN_0179-e-edited
20150823_SUN_0121-e-edited
20150823_SUN_0068-e-edited
20150823_SUN_0375-e-edited
20150823_SUN_0545-e-edited
20150823_SUN_0514-e-edited
20150823_SUN_0478-e-edited
20150823_SUN_0465-e-edited
20150823_SUN_0380-e-edited
20150823_SUN_0309-e-edited
20150823_SUN_0285-e-edited
20150823_SUN_0281-e-edited
20150823_SUN_0179-e-edited
20150823_SUN_0121-e-edited
20150823_SUN_0068-e-edited

ஈஷா கிராமோத்சவம் 2015 – கோவை கொடிசியா மைதானத்திலிருந்து செய்யப்பட்ட நேரடி வர்ணனை…

4 Sep - 6.00pm

முன்னதாக கபடி மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கிய சச்சின் டென்டுல்கர் அவர்கள், ஆண்களுக்கான கைப்பந்து இறுதிப்போட்டியில் வென்ற திருச்சி லத்தேரி அணிக்கு வெற்றிக் கோப்பையை தன் கரங்களால் வழங்கியதோடு, பெண்களுக்கான எறிபந்து இறுதிப்போட்டியில் வென்ற தேவராயபுரம் அணிக்கும் வெற்றிக் கோப்பையினை வழங்கி கௌரவித்தார்.

சத்குரு பேசுகையில்…

பள்ளி-கல்லூரிப் படிப்பை அரைமனதுடன் படிக்கலாம்; வேலைக்கு செல்லும்போது அரைமனதுடன் வேலைக்குசெல்லலாம்; திருமணம் கூட அரைமனதுடன் செய்துகொள்ளமுடியும்! ஆனால் விளையாட்டை அரைமனதுடன் விளையாட முடியாது! 100 சத்விகிதம் முழுமையான ஈடுபாடு இருந்தால் மட்டுமே விளையாட முடியும் என விளையாட்டின் தனித்துவத்தை விளக்கிய சத்குரு அவர்கள், அனைவரும் ஏதேனும் ஒரு விளையாட்டில் தினமும் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை முழக்கத்திற்கிடையில், அங்கு கூடியிருந்த சுமார் 60,000 பார்வையாளர்களும் ஆர்ப்பரிக்க சச்சினும் சத்குருவும் அரங்கிலிருந்து விடைபெற்றனர்.

4 Sep - 5.55pm

ஆரோக்கியமே பெரும் செல்வம்!

விளையாட்டு நமக்கு வழங்கக்கூடிய பலன்களைப் பற்றி பேசிய சச்சின் அவர்கள், தனது பாட்டி தன்னிடம் ஆரோக்கியமே எல்லாவற்றையும் விட பெரிய செல்வம் என அறிவுறுதை நினைவு கூர்ந்தார்.

கிராம மக்களிடையே உற்சாகத்தை உண்டாக்க இத்தகு பெரும் முயற்சியை மேற்கொண்டு வரும் சத்குருவிற்கு தனது நன்றிகளை தெரிவித்ததோடு சத்குருவுடன் இணைந்து தனது பங்களிப்பையும் வழங்க விருப்பத்துடன் உள்ளதாக தெரிவித்தார்.

4 Sep - 5.32pm

சச்சின் தனது கரங்களால் முதல் பந்தை வீச துவங்கியது ஆண்களுக்கான கைப்பந்து இறுதிப்போட்டி!

20150904_SUN_0713-e1

20150904_SUN_0783-e1

20150904_SUN_0744-e1

4 Sep - 4.30pm

20150904_SUN_0560-e1

20150904_SUN_0580-e1

20150904_SUN_0588-e1

20150904_SUN_0599-e1

20150904_SUN_0620-e1

20150904_SUN_0648-e1

20150904_SUN_0652-e1

20150904_SUN_0683-e1

உற்சாகக் குரல்களால் அரங்கம் அதிர… சச்சினுடன் சத்குரு மைதானத்தில் நுழைகிறார்!

சச்சின்…! சச்சின்…! சச்சின்…! என்ற முழக்கம் விண்ணை முட்டுகிறது. சத்குரு முதல் சர்வை வீச பெண்களுக்கான எறிபந்து இறுதிப்போட்டி துவங்குகிறது!

4 Sep - 3.20pm

இறுதிப்போட்டிகள் துவக்கம்!

ஆண்களுக்கான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், திருச்சி அணி வேலூர் அணியை வெற்றிகொண்டதைத் தொடர்ந்து, இன்னும் சற்று நேரத்தில் துவங்கவிருக்கும் இறுதிப்போட்டியில், திருச்சி அணி ஈரோடு அரசம்பட்டி அணியை சந்திக்க உள்ளது.

அதேபோல் பெண்களுக்கான எறிபந்து இறுதிப்போட்டியில்…

கொளப்பளூர் அணி தேவராயபுரம் அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள உள்ளது.

சச்சின் கைகளால் பரிசுவாங்கப்போகும் அணிகள் எவை என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும், காத்திருங்கள்!

DSC_8578-e

DSC_8596-e

DSC_8587-e

DSC_8636-e

20150904_SUN_0451-e

4 Sep - 2.50pm

பசி நேரம்… வாய்ப்பாக கிராமிய உணவுத்திருவிழா!

சுவாரஸ்யத்திற்கும் பொழுதுபோக்கிற்கும் சற்றும் குறைவில்லாத மைதானத்தில் பசி மட்டும் குறைவைக்குமா என்ன?!

ஆனால் பசிக்கு மட்டுமல்ல ருசிக்கவும் கூட வாய்ப்பாக இங்கே கிராமிய உணவு திருவிழா அமைந்துள்ளது!

தினை பாயாசம், தினை பொங்கல், கம்பு சாதம், கார கொழுக்கட்டை, இனிப்பு வடை என பல்வேறு பாரம்பரிய உணவு வகைகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.

4 Sep - 2.30pm

உற்சாகக் குரல்களால் அரங்கம் அதிர… சச்சினுடன் சத்குரு மைதானத்தில் நுழைகிறார்!

சச்சின்…! சச்சின்…! சச்சின்…! என்ற முழக்கம் விண்ணை முட்டுகிறது. சத்குரு முதல் சர்
வை வீச பெண்களுக்கான எறிபந்து இறுதிப்போட்டி துவங்குகிறது!

4 Sep - 1.47pm

முதல் அரையிறுதிப்போட்டி முடிவு!

கடலூர் அணியை வென்று அரசம்பட்டி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி, திருச்சி மற்றும் வேலூர் அணிகளுக்கிடையே பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

4 Sep - 12.15pm

பெண்களுக்கான எறிபந்து இரண்டாவது அரையிறுதிப்போட்டி முடிவு!

சந்தேகவுண்டன்பாளையம் ஈஷா வித்யா அணி கொளப்பலூர் அணியிடம் வீழ்ந்தது. கொளப்பளூர் வீராங்கனைகள் தேவராயபுரம் அணி வீராங்கனைகளுடன் இறுதிப்போட்டியில் மோதுவார்கள்.

பெண்கள் எறிபந்து மூன்றாவது இடத்திற்கான போட்டி முருகன்புதூர் அணிக்கும் சந்தேகவுண்டன்பாளையம் அணிக்கும் இடையே மற்றொரு களத்தில் நடைபெற்று வருகிறது.

துவங்கிவிட்டது ஆண்களுக்கான கைப்பந்து அரயிறுதிப்போட்டிகள்!

முதல் அரையிறுதிப்போட்டி கடலூர் அணிக்கும் அரசம்பட்டி அணிக்கும் இடையே தற்பொது நடைபெற்று வருகிறது.

4 Sep - 11.50am

மாபெரும் கபடிப் போட்டி!

ஈஷா கிராமோத்சவத்தின் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அளவிலான கபடிப் போட்டிகள் ஆகஸ்டு 29, 30 தேதிகளில் நடைபெற்றது. இதில் கோவை மண்டலத்தில் இருந்து 64 அணிகள் கலந்துகொண்டன. கோவை பச்சாபாளையம் காமாட்சி நகரில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஆரம்பமான இப்போட்டிகள் ஞாயிறு இரவு 8 மணி அளவில் முடிவடைந்தது.

இறுதிப் போட்டியில் பேரூர் கபடிக் குழுவும் காருண்யா அணியும் மோதின. மிகவும் விருவிருப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் காருண்யா அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பேரூர் அணியை 11 – 7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக ரூ 10000மும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ 6000மும் செப்டம்பர் 4ம் தேதியன்று ஈஷா கிராமோத்சவ விழாவில் வழங்கப்படும

4 Sep - 11.45am

சிறுவர்களுக்கான கேளிக்கை விளையாட்டுப் போட்டிகள்

20150904_SUN_0082-e

20150904_SUN_0092-e

4 Sep - 11.40am

கிராமிய விளையாட்டு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள்

மைதானத்தின் வடக்கு எல்லையில் கிராமிய விளையாட்டு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் தற்போது களைகட்டியுள்ளன.

தகிக்கும் சூரியனையும் பொருட்படுத்தாமல் ஒயிலாட்டத்தை ஒருபுறம் கிராமிய கலைஞர்கள் வழங்க, இன்னொரு புறம் உரியடிக்கும் போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்டு வருகின்றனர் பார்வையாளர்கள்.

20150904_RVK_0377-e

20150904_RVK_0406-e

20150904_RVK_0443-e

20150904_RVK_0474-e

4 Sep - 11.06am

பெண்களுக்கான எறிபந்து முதல் அரையிறுதி முடிவு!

பெண்களுக்கான எறிபந்து முதலாவது அரையிறுதியில், கோவை தேவராயபுரம் அணி கோபி முருகன்புதூர் அணியை வெற்றிகொண்டது.

இரண்டாவது அரையிறுதிப்போட்டி, சந்தேகவுண்டன்பாளையம் ஈஷா வித்யா அணிக்கும் கொளப்பலூர் அணிக்கும் இடையில் துவங்க உள்ளது.

20150904_SUN_0074-e

20150904_SUN_0051-e

4 Sep - 10.17am

சற்றுமுன் துவங்கியது விழா…

ஈஷா கிராமோத்சவ நிகழ்ச்சியை சற்றுமுன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் திரு A.P.நாகராஜன் அவர்கள் துவங்கி வைத்து சிறப்பித்தார்.

பெண்களுக்கான எறிபந்து அரையிறுதி!

தற்போது துவங்கியுள்ள பெண்களுக்கான எறிபந்து முதலாவது அரையிறுதியில், கோவை தேவராயபுரம் அணியும் கோபி முருகன்புதூர் அணியும் பரபரப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆண்களுக்கான கைப்பந்து அரையிறுதி பெண்கள் அரையிறுதிப் போட்டிக்களுக்குப் பின்னதாக நடைபெற உள்ளது!

20150904_SUN_0011-e

20150904_SUN_0042-e

20150904_SUN_0043-e

20150904_SUN_0036-e

4 Sep - 9.07am

கொடீசியாவில் தொற்றிக்கொண்ட உற்சாகம்!

கொடீசியா மைதானத்தில் சச்சினையும் சத்குருவையும் சேர்ந்து பார்க்கப்போகும் உற்சாகம் இப்போதிருந்தே மக்களின் முகங்களில் காணமுடிகிறது!

தற்போது ஆண்களுக்கான கைப்பந்து போட்டியின் முதல் அரையிறுதிப்போட்டி ஈரோடு மற்றும் கடலூர் அணிகளுக்கு இடையே துவங்குகிறது!

அரையிறுதிப்போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணி வீரர்களும் முனைப்புடன் உள்ளனர்.

3 Sep - 6.59pm

சம பலத்துடன் நிகழ்ந்த கோவை மத்வராயபுரம் மற்றும் வெள்ளூர் லத்தேரி அணிகளுக்கு இடையேயான மூன்றாவது காலிறுதியில், வெள்ளூர் லத்தேரி அணி விடாமுயற்சியுடன் போராடி மத்வராயபுரம் அணியை வீழ்த்தியது.

திருச்சி மற்றும் திருவண்ணாமலை அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த ஆண்களுக்கான நான்காவது காலிறுதிப் போட்டி, நாளை காலை நடைபெற உள்ளது.

3 Sep - 5.51pm

கவனக்குறைவாக விளையாடுயதே எங்கள் தோல்விக்கு காரணம் என தெரிவித்த மதுரை அணியின் சென்ட்டர் ப்ளேசில் விளையாடிய விஜய், அடுத்த முறை நிச்சயம் கோப்பையை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

மூன்றாவது ஆண்களுக்கான கைப்பந்து காலிறுதிப் போட்டி கோவை மத்வராயபுரம் மற்றும் வெள்ளூர் லத்தேரி அணிகளுக்கிடையே போட்டி துவங்குகிறது!

பெண்களுக்கான எறிபந்து காலிறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்று கோபி முருகன்புதூர், கொளப்பலூர், தேவராயபுரம், சந்தேகவுண்டன்பாளையம் ஈஷா வித்யா அணி ஆகிய 4 அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.

3 Sep - 5.30pm

ஆண்களுக்கான இரண்டாவது காலிறுதிப்போட்டியில் ஈரோடு அணி இரண்டாவது சுற்றையும் கைப்பற்றி மதுரை அணியை வென்றுள்ளது.

20150903_SUN_0162-e

20150903_SUN_0152-e

3 Sep - 5.27pm

ஆண்களுக்கான இரண்டாவது காலிறுதிப்போட்டியில் முதல் சுற்றை ஈரோடு கைப்பற்றிய நிலையில், அடுத்த சுற்றைக் கைப்பற்ற மதுரை அணி கடுமையாகப் போராடி வருகிறது.

3 Sep - 4.58pm

ஈஷா கிரோமோத்சவ புகைப்படப் போட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்களில் சிறந்த 3 புகைப்படங்கள் முதல் மூன்று பரிசுகளுக்கு தேர்வாகியுள்ளது.

கிராமப்புற வாழ்க்கைச் சூழலை மையக்கருவாக வைத்து நடத்தப்பட்ட இந்த புகைப்பட போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 80 புகைப்படங்கள் போட்டிக்கு வந்தன. அவற்றுள் சிறந்த 3 புகைப்படங்கள் தேர்வாகி முதல் மூன்று இடங்களை வென்றுள்ளன.

இதனைத் தேர்வு செய்த திரு.மருதாச்சலம் , (RK ஃபோட்டோ சென்ட்டர்) அவர்கள்,

முதல் புகைப்படம் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இயற்கை சூழலையும் கிராமத்தின் நிறத்தையும் வெளிப்படுத்துவதாகவும், இரண்டாவது புகைப்படம் வாழ்வில் சாதிக்க மேற்கொள்ளும் போராட்டத்தை உணர்த்துவதாகவும், மூன்றாவது புகைப்படம் வாழ்வாதாரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

First place Deepak Raj

Second place Wildwithvivi2

Third place Chetan Karur

3 Sep - 4.49pm

காலிறுதிப்போட்டியில், வெகு சிறப்பாக விளையாடிய கடலூர் ஆண்கள் கைப்பந்து அணியினர் திருநெல்வேலி அணியை வென்றனர்.

இரண்டாவது காலிறுதிப்போட்டி, மதுரை மற்றும் ஈரோடு அணிகளுக்கிடையே துவங்குகிறது!

மைதானத்தின் வடக்கு எல்லையில் பெண்களுக்கான எறிபந்து காலிறுதிப்போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

3 Sep - 4.11pm

ஆண்களுக்கான கைப்பந்து காலிறுதிப்போட்டிகளின் முதல் ஆட்டம் கடலூர் மற்றும் திருநெல்வேலி அணிகளுக்கிடையே நடக்கவிருக்கிறது!

இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் வார்ம் அப் செய்து தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

3 Sep - 3.50pm

பெண்களுக்கான எறிபந்து போட்டியின் புகைப்படங்கள்

20150903_RVK_0210-e1

20150903_RVK_0167-e1

20150903_RVK_0225-e1

20150903_RVK_0233-e1

3 Sep - 12.54pm

கொடிசியாவில் காலிறுதிப் போட்டிகள் துவங்குகின்றன…

இன்று மதியம் 2 மணியளவில் ஈஷா புத்துணர்வு கோப்பைக்கான ஆண்களுக்கான கைப்பந்து மற்றும் பெண்களுக்கான எறிபந்து விளையாட்டின் காலிறுதிப் போட்டிகள், கோவை-கொடிசியா மைதானத்தில் வெகு சிறப்பாக துவங்க உள்ளன.

தமிழகம் முழுவதும் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 8 மண்டலங்களில் நடந்த பல்வேறு கட்ட போட்டிகளைத் தொடர்ந்து தற்போது ஒவ்வொரு மண்டலத்திலுமிருந்து ஒவ்வொரு அணிகள் என 8 அணிகள் காலிறுதிப் போட்டிகளில் மோதுகின்றன. காலிறுதியில் வெற்றிபெறும் 4 அணிகள் நாளை நடைபெறும் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு முன்னேறும்.

தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 640 அணிகள், 8000 விளையாட்டு வீரர்கள் முதற்கட்ட போட்டிகளில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் கைகளால் வெற்றிக்கோப்பை

நாளையதினம் கொடிசியா மைதானத்தில் மிகப்பிரம்மாண்டமாக நிகழவிருக்கும் கிராமோத்சவ விழா நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு சத்குரு அவர்களின் முன்னிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் பரிசினை வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.

பாரம்பரிய விளையாட்டுகளும், கிராமிய நடனங்களும், இசை நிகழ்ச்சிகளும், அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திருவிழாக்களும் இந்நிகழ்ச்சியில் நிகழவுள்ளன. மேலும் நாள்முழுக்க நிகழவுள்ள கிராமிய உணவுத் திருவிழாவும், சமூக மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வு கண்காட்சியும் இந்நிகழ்ச்சிக்கும் கூடுதல் சிறப்பு சேர்க்க உள்ளன.

ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம்!

கிராமப்புற மக்களின் உடல், உள்ளம், பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பாட்டை கொண்டு வருவதற்காக ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் சார்பில், ஈஷா நடமாடும் கிராம மருத்துவ மனைகள், ஈஷா வித்யா பள்ளிகள், அரசு பள்ளி தத்தெடுப்பு திட்டம் என பல்வேறு செயல்பாடுகள் சத்குருவின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் உச்சகட்ட நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் கிராமங்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதோடு, வெற்றிபெறும் அணிகளுக்கு பிரபலங்கள் கைகளால் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தப்படுகிறது.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert