இன்றைக்கு உறவுகள் ஏன் நெருக்கமற்றுப் போய்விட்டன?

இன்றைக்கு உறவுகள் ஏன் நெருக்கமற்றுப் போய்விட்டன? Inraiku uravugal yean nerukamatru poivitana

கடந்த தலைமுறைக்காரர்கள் ‘நீங்க கூட்டுக் குடும்பமா? தனிக்குடித்தனமா?’ என்று கேட்பது வழக்கம். ஆனால் இன்றோ, குடும்பம் என்றாலே அது கணவன்-மனைவி மற்றும் அவர்களின் குழந்தைகள் மட்டுமே என்றாகிவிட்டது. உறவுகளில் ஏன் இந்த நெருக்கமற்ற நிலை? சத்குருவின் பார்வை இங்கே!

கேள்வி
இன்றைக்கு உறவுகள் ஏன் நெருக்கமற்றுப் போய்விட்டன?

சத்குரு:

கல்வி என்பது ஒருவனது எல்லைகளை விரிவடையச் செய்திருக்க வேண்டும். தனி மனிதனின் நலத்துக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் வந்த விளைவு இது.

முன்பு கிராமங்களே குடும்பங்களாக வாழ்ந்தன. ரத்தத் தொடர்புடைய உறவுகளைத் தாண்டி முன்னூறு நானூறு பேர் அந்தக் குடும்பத்தில் இருந்தார்கள். பிறகு ரத்த சம்பந்தமான உறவுகள் மட்டும் கூடியிருப்பது குடும்பம் என்றானது. அதுவும் மாறி, தாத்தா பாட்டி பெற்றோர், குழந்தைகள் என்று சுருங்கியது.

இன்றைக்கோ, பெற்றோரும் குழந்தைகளும் ஒன்றாக இருப்பதே பெரிய விஷயமாகிவிட்டது. கணவன் மனைவி சேர்ந்து இருந்தாலே கூட்டுக் குடும்பம் என்று அழைக்கும் அளவுக்கு எல்லாம் குறுகிவிட்டது.

விஞ்ஞானம் எதையும் கூறுபோட்டுப் புரிந்து கொள்ள முயல்கிறது. ஒரு ரோஜாவின் இதழ்களைப் பிய்த்து பார்த்துவிட்டு அப்பூவைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாமே தவிர, ரோஜாவை முழுமையாக அனுபவிக்க முடியாது.

இப்படி எல்லாவற்றையும் இன்றைய கல்வி கூறு போட்டு பிரித்துப் பார்த்ததால், தனித்துவம் முக்கியமாக கருதப்பட்டுவிட்டது.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert