இருளிலிருந்து வெளிச்சம், அஞ்ஞானத்திலிருந்து மெய்ஞானம், சேற்றிலிருந்து வாசம். ஒரு நடைவண்டியில் நடைபழக்கி அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வது போல் கடைத்தேற்றி நமக்கு ஞானம் வழங்கும் சரஸ்வதியாய், நவராத்திரியின் இந்த கடைசி மூன்று நாட்களில் அன்னை லிங்கபைரவி அருள்பாலிக்கிறாள். அவள் பாதம் பணியும் சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் அட்டகாசமான பாடல் உங்களுக்காக.

ஸாத்வீகத்தின் சாரம் இந்த மூன்று நாட்களிலும் தழைத்திருக்கும்.

சத்குருவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், "அறிவுத் தேடலில் உள்ளோரும், ஞானத் தேடலில் உள்ளோரும், உடல் கடந்த பரிமாணத்தை உணர விரும்புவோரும், சத்வ குணத்தைக் குறிக்கும் பெண் தன்மையையே நாடிச் செல்வர். சரஸ்வதி சாத்வீக குணத்தின் பிரதிநிதி," என்பார்.

ஆதிசங்கரரின் இந்தப் பாடலில்...

வெள்ளை தாமரையில் வீற்றிருக்கும் அவள் அழகையும், அறிவை வளர்க்கும் அந்த தெய்வீகத்தின் மேன்மையையும் பாடுகிறார் சங்கரர். தொழில் தொடங்கவும், கல்வி கற்பிக்கவும், நம் பணிகளுக்கு துணை புரியும் கருவிகளை வணங்கிடவும் இந்த காலகட்டம் சிறந்தது என நம் கலாச்சாரம் கற்பிக்கிறது.

சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசையில் இதோ அந்த பாடல்.... கேட்டு மகிழுங்கள்.