எழுந்தருள்வாய் பைரவி…! ஒரு புதுப்பாடல்!

அன்பு, கருணை, அழகு, ரௌத்திரம், அமைதி, ஆனந்தம், அருள் என அனைத்தின் இருப்பிடமாகவும் திகழும் லிங்கபைரவி தேவியை முழுமையாய் உணர, அவளை சரணடைவது ஒன்றே சிறந்த வழியாக இருக்கமுடியும். இங்கே ஒரு பக்தரின் அழகிய இந்தி பாடல், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் கைவண்ணத்தில், இந்த நவராத்திரியில் தேவிக்கு ஒரு சமர்ப்பணமாக…

பாடல் வரிகள் தமிழில்…

எழுந்தருள்வாய் பைரவி…!
என் இதயக் கோயிலில் எழுந்தருள்வாயே.
காற்று எனை அலைக்கழிக்க,
தண்ணீரும் ஆர்ப்பரிக்க.
என் தாயே,
என் கரம்பற்றி உன்னுள் முழுதாய் சேர்த்துவிடுவாயே!
ஏதுமறியா பேதை நான்
ஆனாலும் உன் பிள்ளைதான்
அறிவற்றது என் சிந்தைதான்
பக்தியும் அதில் இல்லைதான்!
நானறிந்தது ஒன்றுதான்,
உன்னிடம் அனுதினம் ஆகிறேன் சரணாகதி,
உன் காலடியில் இருக்க எனை அனுமதி!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert