எங்கிருந்தாலும் தரிசனம்

28 jul 13 (2nd)

தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…

குறிப்பு: இரவு 9 மணியளவில் பதிவை எதிர்பார்க்கலாம்.


கண்மூடி அமர்ந்தார், கரைந்துவிட்டோம்!

நெடுநாள் மறைந்திருந்த கதிரவன் இன்று, ஈஷா மையத்தில் அவ்வப்போது தரிசனம் தந்து சென்றான். “ஆஹா வெயில்” எனக் குதூகலித்திருந்த மக்களிடம் சத்குருவின் தரிசனம் அறிவிப்பு வந்ததும் கதிரவன் தரிசனம் இரண்டாம் பட்சம் ஆகிப்போனது.

ஒருநாள் வருகையாக, தற்செயலாக ஆசிரமம் வந்திருந்த தியான அன்பர்கள் முகத்தில்தான் குரு தரிசனம் கிடைத்ததில் எத்தனை ஆனந்தம்!

சரி தரிசன நிகழ்வுகள் என்ன..? சத்குரு என்ன பேசினார்? ஸ்வாரசிய கேள்விகள் ஏதும் கேட்கப்பட்டதா? என கேட்கத் துடிக்கும் உங்கள் மன ஓட்டம் புரிகிறது.

இன்று தரிசன நிகழ்வைக் கூற வார்த்தைகள் இல்லை என்பதே நிதர்சனம். ஆம்! இன்று தரிசன நேரம் சக்தி வெள்ளத்தில் மிதந்தது என்றால் அது மிகையாக இருக்காது.

“கண் முன்னே சத்குரு
கண்மூடி தியானத்தில்
வார்த்தை பேசவில்லை
அதற்கு தேவையும் இருக்கவில்லை
பின்னணியில் ஒரு தாளம்
பண்ணிசை போல் ஒலித்திருக்க
பெருகியது அருள் வெள்ளம்
கரைந் தோடியது அன்பர் உள்ளம்”

இறுதியில், சிவனின் பலவித நாமங்களைக் கூறி அந்த சமஸ்கிருதப் பாடல் அழைக்க, திருநீற்றைத் கைகளால் தொட்டுக் கொடுத்து, கண்களால் அன்பர்களையும் தொட்டுச் சென்றார்.

மீண்டும் ஒரு தரிசன நேரத்தில் கரைந்தோடக் காத்திருப்போம்!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert