இங்கே கோவை ஈஷா யோகா மையத்தில், சில நூறு பேர் சத்குருவின் தரிசனத்தில், அவர் அருளில் திளைக்க காத்திருக்கிறோம். உங்களுக்கும் அந்தப் பட்டியலில் சேர விருப்பமா? இதோ இந்த நேரலை வர்ணனையில் எங்களுடன் இணைந்திருங்கள். மாலை 6.20 மணிக்கு துவங்கும் தரிசன நேரம் முழுமையாக உங்கள் கணினித் திரையில் விரிகிறது...

6:20

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கீழ்வானம் லேசாக சிவந்திருக்க, அதை மறைத்திருக்கும் மேகங்கள் பொழியக் காத்திருக்க, சத்குரு வந்து அமர்ந்து மஹாதேவரின் மந்திரம் ஒன்றை உச்சரித்துவிட்டு, கேள்விகளை கேட்கச்சொல்லி கைகாட்டுகிறார்.

6:30

பூதசுத்தியின் முக்கியத்துவம் பற்றி ஒருவர் கேட்க, "உங்கள் கர்மப்பதிவுகளின் வேர் உங்கள் உடலில் உள்ள பஞ்சபூதங்களில் வேரூன்றி இருக்கிறது. அதை உங்கள் உடலில் நீங்கள் சுத்திகரிப்பது மூலம் கர்மப்பதிவுகளை கரைத்திடமுடியும். இதைச் செய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளன." என்று சத்குரு கூறினார். ஈஷாவில் வழங்கப்படும் பூதசுத்தி பயிற்சி, பஞ்சபூத ஆராதனையை விளக்கி, ஆசனங்கள் மற்றும் கிரியா பயிற்சிகளில் எந்த அளவு பூதசுத்தியின் அம்சங்கள் பொதிந்துள்ளன என்றும் சத்குரு விவரித்தார்.

6:45

மதிய வேளையில் தினமும் மத்தளம் அடித்துக்கொண்டு சில தன்னார்வத் தொண்டர்கள் அசிரமத்தை வலம் வருவர். இந்த டமரு சேவாவின் முக்கியத்துவம் குறித்து ஒருவர் கேள்வி கேட்க, "டமரு அல்லது மத்தளம் என்பது மிகவும் அடிப்படையான ஒலியை எழுப்புகிறது. மேலும் இவ்வளவு சக்தியுடன் அதிர்ந்துகொண்டிருக்கும் இவ்விடத்தின் நிச்சலனத்தை உடைக்க அவ்வப்போது இதைச் செய்ய வேண்டியுள்ளது. இதுவும் இவ்விடத்தின் பிற சேவைகள் அனைத்தும், ஒருவர் இங்கு நிறைந்திருக்கும் அருளை பக்தியுணர்வுடன் உள்வாங்கிட உதவுகிறது." என்று கூறினார் சத்குரு. மேலும், டமருவின் தன்மையை உணர்த்த, டமரு ஒலிகொண்டு கூடியிருந்தோரை தியானத்தில் வெடிக்கச்செய்தார்.

7:07

பிறகு மெல்லிசை இசைத்திருக்க, சிலநிமிடங்கள் அசைவின்றி அமர்ந்துவிட்டு, வணங்கி விடைபெற்றார் சத்குரு.