"நம் வீட்டுப்பெண்கள் நாகரீகமாக உடையணிய வேண்டும். நம் வீட்டில் எந்தவொரு அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது." இப்படி நினைப்பதில் தவறில்லை. ஆனால், டி.வி.'யிலோ வெளியிலோ உலவுகிறவர்களை ரசிக்கும்போது மனம் அப்படி நினைப்பதில்லை. இப்படிப்பட்ட மனநிலை ஏன் மனிதனுக்கு?! மனித மனத்தின் உளவியல் சார்ந்த இந்தக் கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு என்ன கூறினார்..? வீடியோவில் பாருங்கள்!

காவல்துறைக்கு எதற்கு ஆன்மீகம்?! - VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 32B

காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் சத்குருவிடம் காவல்துறையில் ஆன்மீகத்தை இணைத்து செயல்படுவது குறித்து கேட்டபோது, 'போலீஸ் என்றாலே ஓடி ஒளியும் மனநிலை சாமானியதான் மனிதனின் மனதில் இன்றும் உள்ளது. இந்த நிலை மாறி, காவல்துறை என்பது மக்களுக்காக உள்ள துறை என்பதை மக்களின் மனதில் கொண்டு வரவேண்டுமென்றால் காவல்துறைக்கு ஆன்மீகத்தின் தேவை உள்ளது' என்பதை வீடியோவில் விளக்குகிறார் சத்குரு!

போலீஸ்காரனுக்கு உள்ளத்தில் சமநிலை சாத்தியமா? - VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 32C

தினம் தினம் கொலைகளையும் குற்றங்களையும் பார்க்கும் ஒரு போலீஸ்காரன் எப்படி ஆனந்தத்தையும் உள்ளத்தில் சமநிலையையும் உணரமுடியும்? இந்தக் கேள்வியை முன்னாள் காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அளித்த பதில் காவல்துறையிலிருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. வீடியோ இங்கே!