சென்னையில் வெடித்த ஆன்மீக வெடி…

சென்னை சத்குரு வகுப்பு எப்படியிருந்தது என்று கேட்டால், “அத எப்படி சொல்றது ச்சான்ஸே இல்ல” என்று ஆயிரம் வாட்ஸ் புன்னகை மின்ன, உற்சாக வார்த்தைகளை உதிர்த்துச் செல்பவர்களை வழியெங்கும் காணமுடிகிறது. சரி! சென்னை வகுப்பு அனுபவம் குறித்து சத்குரு சொல்லியிருப்பது என்ன? இதோ சத்குரு ஸ்பாட் உங்களுக்காக…

 

15,265 பேர் சென்னை மெகா வகுப்பிற்குத் திரண்டிருந்தனர். இதுவரை நடந்த நிகழ்ச்சிகளுள் மிக அதிக மக்கள் ஷாம்பவி தீக்ஷை பெற்ற நிகழ்ச்சி இதுதான்.

சென்னை தன்னார்வத் தொண்டர்களின் அயராத முயற்சியால்தான், இத்தகைய சக்தி வாய்ந்த செயல்முறை சென்னை மக்களை அடைந்துள்ளது.

அதற்குக் கைமாறாக அனைத்துப் பங்கேற்பாளர்களும் அதீத ஈடுபாடு, தீவிரம் மற்றும் ஒழுங்கினை வெளிப்படுத்தினர்.

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு ஆன்மீக வெடிமுழக்கம்.

நிகழ்ச்சி முடிந்த மூன்று மணி நேரத்தில், இதோ நான் சிங்கப்பூர் சென்று கொண்டிருக்கிறேன். அங்கிருந்து அமெரிக்கா செல்ல வேண்டும்; தொடர்ந்து பல நிகழ்வுகள் அங்கு காத்திருக்கின்றன.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert