ஈஷா ருசி

பழங்களையும் தானியங்களையும் அப்படியே சாப்பிடாமல், நன்றாக அரைத்து, சுவைக்கு சில பொருட்களையும் சேர்த்து பருகினால் ஆரோக்கியமும் சேர்ந்து வருவதை தவிர்க்க முடியாது. அந்த விதத்தில் ஆரோக்கியமான, சுவையான பானங்கள் இங்கே... பருகி மகிழுங்கள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கேரட் கீர்

தேவையான பொருட்கள்

கேரட் - 1 கிலோ
பால் - 1/2 லிட்டர்
முந்திரி - 150 கிராம்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை

  • கேரட்டை வேக வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
  • முந்திரியை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • பாலை கொதிக்க வைத்து அரைத்த கேரட், முந்திரி மற்றும் சர்க்கரை, ஏலக்காய் தூள் போட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.
  • குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். சத்துமிக்க பானம் இது

எனர்ஜி மால்ட்

தேவையானவை

பொட்டுக் கடலை - 100 கிராம்
உளுந்து - 100 கிராம்
முழு கோதுமை - 200 கிராம்
சர்க்கரைத்தூள் - 100 கிராம்
பால்பவுடர் - 100 கிராம்
கம்பு அரிசி - 100 கிராம்
கேப்பை அரிசி - 200 கிராம்
ஏலம் - 2 அல்லது 3
முந்திரி பருப்பு - 50 கிராம்

செய்முறை

  • உளுந்து, கோதுமை, கேப்பை, கம்பு தானியங்களை தனித்தனியே சிறுதீயில் வறுத்து நன்கு பொரிந்து சிவந்து மணம் வரும்வரை வறுக்கவும்.
  • வறுத்த தானியம், பொரிகடலை, ஏலப்பொடி பால்பவுடர், சர்க்கரை முந்திரி இவற்றை நன்கு பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • கொதித்த நீரில் இந்த பவுடரை போட்டு சர்க்கரை கலந்து சாப்பிடலாம். பால் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.